
தமிழக முன்னாள் முதல்வரும் அஇஅதிமுக முன்னாள் பொதுச் செயலாளருமான செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் 9-ஆம்ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதூரில் பொதுமக்களுக்கு அன்னதான வழங்கப்பட்டது
ஸ்ரீபெரும்புதூர் டிசம்பர் 5
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் ஸ்ரீபெரும்புதூர் நகர ஆஇஅதிமுக சார்பில் முன்னாள் தமிழக முதல்வரும் ஆஇஅதிமுக முன்னாள் பொதுச் செயலாளருமான ஜெ. ஜெயலலிதா அவர்களின் 9-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிறுத்தம் அருகே பொதுமக்கள் மற்றும் ஏழை எளியோருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நகரச் செயலாளர் போந்தூர் மோகன் தலைமையில் நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியில் காஞ்சி மாவட்டச் செயலாளர் சோமசுந்தரம், ஒன்றிய கவுன்சிலர் போந்தூர் செந்தில் ராஜன், இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாநில துணைச் செயலாளர்சிவக்குமார்,ஒன்றிய செயலாளர் இறையூர் முனுசாமி அழைப்பாளர்களாக கலந்து கொண்டு அன்னதானம் வழங்கினார்கள்.
மற்றும் அம்மா பேரவை நகரச் செயலாளர் புஷ்பராஜ், நகர மகளிர் அணிதுணைச் செயலாளர் சுதா,உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.






