
ரீபெரும்புதூர் சுங்கச்சாவடியில் தினமும் பகல் நேரத்தில் வாகன நெரிசல் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் அவதி அவசர ஊர்தி ஆம்புலன்ஸ் செல்வதற்கு கூட வழி கிடைக்கவில்லை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை
ஸ்ரீபெரும்புதூர் நவம்பர் 27
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் சென்னை டு பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி அமைந்துள்ளது ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடி சுற்றிலும் மாம்பாக்கம் பிள்ளைப்பாக்கம் இருங்காட்டுக்கோட்டை உள்ளிட்ட சிப்காட் தொழிற் பூங்காக்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.

இந்நிலையில் தொழிற்சாலைகளின் கனரக வாகனங்கள் மற்றும் பொதுப் போக்குவரத்து என தினமும் ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடியினை ஒரு நாளைக்கு சுமார் 5000 வாகனங்கள் கடந்து செல்கின்றன மற்றும் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி நடந்து கொண்டிருப்பதால் பகல் நேரத்தில் சாலை விரிவாக்க பணி நடப்பதாலும் சாலை குறுகலாக மாற்றப்பட்டு அதிகமான வாகன நெருச்சில் ஏற்படுவதாக இதனால் அவசர உறுதியான ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியவில்லை 1கிமீ தூரத்திற்கு வாகனங்கள் நிற்கின்றன என பொதுமக்கள் கூறுகின்றனர்.
எனவே சாலை விரிவாக்க பணியினை இரவு நேரத்தில் வாகனங்கள் குறைவாக உள்ளபோது செய்து முடிக்கலாம் எனவும் பகல் நேரத்தில் சாலை விரிவாக்க பணியினை செய்வது சரியானது இல்லை எனவும் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய வேண்டும் என்பது வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.






