
உடுமலை மற்றும் மடத்துக்குளத்தில் அரசு ஊழியர் சங்கம் சார்பில் வாகன பிரச்சார இயக்கம் நடைபெற்றது.
உடுமலை, நவம்பர் : 27.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில பிரநிதித்துவ பேரவையின் அறைகூவல் தீர்மானத்தின்படி 27.11.2025 இன்று உடுமலை ,மற்றும் மடத்துக்குளம் வட்டக்கிளை சார்பாக வாகன பிரச்சாரம் இயக்கம் ESI அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், தொழிற்பயிற்சி மையம், ஊரக வளர்ச்சிதுறை அலுவலகம்,நகராட்சி அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது…

உடுமலையில், வட்ட கிளை தலைவர் மார்க்கண்டன் தலைமையில் கோரிக்கை விளக்கவுரை K.வெங்கிடுசாமி (வட்டகிளை செயலாளர்), மாவட்ட செயலாளர் M. பாலசுப்பிரமணியன் சிறப்புரை ஆற்றினார்.
S.தங்கப்பாண்டி (வட்ட கிளை பொருளாளர்) நன்றி உரை கூறினார்.. நிகழ்வில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் R.ஜெகதீஸ்வரன் , வட்டக்கிளை துணைத் தலைவர் K.செல்லமுத்து, தணிக்கையாளர் M.கருப்புசாமி, செயற்குழு உறுப்பினர்கள் G மாரிமுத்து C. மாரிமுத்து A கனகராஜ் மற்றும் தாராபுரம் வட்ட கிளை நிர்வாகிகள் V.தங்கவேல் A. மணிமொழி சிவராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்..
இதே போன்று மடத்துக்குளம் வட்டாட்சியர் அலுவலகம், வேளாண்மை துறை அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களில் நடைபெற்ற பிரச்சார இயக்கத்தில் அரசு ஊழியர் சங்கம் மடத்துக்குளம் வட்டக்கிளை தலைவர் என் சிவகுமார் தலைமையில் கோரிக்கை விளக்கவுரை அ.பாலு (வட்டக்கிளை செயலாளர்) நிறைவுரை செ. பாலசுப்பிரமணியம் (மாவட்ட செயலாளர் அரசு ஊழியர் சங்கம்) மற்றும் பலர் பங்கேற்றனர் R.ரமேஷ்குமார் (வட்டக்கிளை துணை தலைவர்) நன்றியுரை ஆற்றினார்..
பிரச்சாரத்தில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்..






