March 2, 2026
ஸ்ரீபெரும்புதூர் சமூக விரோதிகளால் சீரழிந்து கொண்டிருக்கும் நீர்நிலைப் பகுதிகள் செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்லும் நீரில் கலக்கும் குப்பை கழிவுகள் நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்

ஸ்ரீபெரும்புதூர் சமூக விரோதிகளால் சீரழிந்து கொண்டிருக்கும் நீர்நிலைப் பகுதிகள் செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்லும் நீரில் கலக்கும் குப்பை கழிவுகள் நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்

ஸ்ரீபெரும்புதூர் நவம்பர் 27

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே ஸ்ரீபெரும்புதூரில் இருந்து குன்றத்தூர் வடபழனி செல்லும் சாலை ஓரங்களில் நீர்நிலைப் பகுதிகள் அதிகம் உள்ளன வெங்காடு ஏரி, அமரன் பேடு ஏரி, நல்லூர் ஏரி, காட்றம்பாக்கம் ஏரி உள்ளிட்ட ஏரிகள் உள்ள நிலையில் ஒரு சில சமூகவிரோதிகளால் இரவு நேரங்களில் உணவு மற்றும் பிளாஸ்டிக் எலக்ட்ரானிக் கழிவுகள் என அனைத்தும் டன் கணக்கில் நீர்நிலை ஓரங்களில் கொட்டப்படுகிறது இதனால் நீர் வாழ் உயிரினங்கள் அவ்வழியே மேய்ச்சலுக்கு வரும் கால்நடைகள் அனைத்தும் பாதிக்கப்படுகின்றன அது மட்டுமன்றி அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளும் துர்நாற்றம் வீசுவதால் முகம் சுளிக்கின்றனர்,

குறிப்பாக ஸ்ரீபெரும்புதூர் ஏரியிலிருந்து பென்னலூர் காட்றம்பாக்கம் புதுப்பேரு வழியாக ஸ்ரீபெரும்புதூர் ஏரி நீர் செம்பரம்பாக்கம் சென்றடைகிறது இவை சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது இந்நிலையில் இப்படி சமூக விரோதிகளால் கொட்டப்படும் கழிவுகளால் மழை நீரோடு கலந்து செம்பரம்பாக்கம் ஏரியில் சென்றடைகிறது இவை மக்களின் சுகாதார சீர்கேட்டிற்கு பெரிதும் ஆபத்தாக உள்ளது.

எனவே நீர் நிலையான ஏரி ஓடை ஓரங்களில் உள்ள கழிவுகளை அப்புறப்படுத்தவும் சமூக விரோதிகளை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சாலை வழியை செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *