March 2, 2026
அரசியலமைப்பு சட்ட தின கொண்டாட்டம்

அரசியலமைப்பு சட்ட தின கொண்டாட்டம்

திருநெல்வேலி, நவம்பர் : 27.

திருநெல்வேலி மாவட்டம் பேட்டை காமராஜர் நகர் மன்றம் மேல்நிலைப் பள்ளியில் தேர்தல் கல்வியறிவு குழு சார்பாக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 76 வது ஆண்டு முன்னிட்டு பள்ளியில் அரசியலமைப்பு நெறிமுறைகள் குறித்த நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியை இவாஞ்சலின் தலைமை தாங்கினார். பள்ளியின் முதுகலை வரலாறு ஆசிரியர் திரு தனுஷ்கோடி அவர்கள் அரசியலமைப்பு சட்ட தினம் குறித்து அதன் பெருமைகள் குறித்தும் சிறப்புரையாற்றினார்.

பட்டதாரி வரலாறு ஆசிரியர் திரு பக்கீர் மொகிதீன் அவர்கள் கடமைகள் மற்றும் உரிமைகள் குறித்து சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தேர்தல் கல்வியை குழு பொறுப்பாளரும் முதுகலை பொருளாதார ஆசிரியருமான பொன்னுசாமி செய்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *