March 2, 2026
ஸ்ரீபெரும்புதூர் -சுங்குவார்சத்திரத்தில் தமிழக துணை முதல்வரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு இனிப்பு மற்றும் உணவு வழங்கப்பட்டது

ஸ்ரீபெரும்புதூர் -சுங்குவார்சத்திரத்தில் தமிழக துணை முதல்வரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு இனிப்பு மற்றும் உணவு வழங்கப்பட்டது

ஸ்ரீபெரும்புதூர் நவம்பர் 27

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் திமுக வடக்கு மற்றும் தெற்கு ஒன்றியம் சார்பில் தமிழக துணை முதல்வரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதூர் வடக்கு மற்றும் தெற்கு ஒன்றியங்களில் அறிஞர் அண்ணா அவர்களின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து ஏழை எளிய பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் உணவு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய குழு பெருந்தலைவரும் வடக்கு ஒன்றிய செயலாளருமான கருணாநிதி, ஸ்ரீபெரும்புதூர் தெற்கு ஒன்றிய செயலாளர் கோபால், ஸ்ரீபெரும்புதூர் நகர தலைவர் சதீஷ்குமார் உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய கிளை நிர்வாகிகள் பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *