March 2, 2026
ஆயக்குடியில் காயிதே மில்லத் சமூக சேவை அறக்கட்டளை சார்பாக ஆதார் சிறப்பு திருத்த முகாம்...

ஆயக்குடியில் காயிதே மில்லத் சமூக சேவை அறக்கட்டளை சார்பாக ஆதார் சிறப்பு திருத்த முகாம்...

பழனி : நவம்பர்.23

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த ஆயக்குடியில் உள்ள அத்தா மகாலில் ஆயை காயிதே மில்லத் சிறுபான்மையினர் சமூக சேவை அறக்கட்டளையின் சார்பாக நிறுவனத் தலைவர் டாக்டர். அஜ்மத் அலி (கவுன்சிலர்) தலைமையில் ஏழாவது முறையாக ஆதார் சிறப்பு திருத்த முகாம் நிகழ்ச்சி நடைபெற்றன.

இந்நிகழ்வின் தலைமையாக ஜாகிர் உசேன் முன்னிலையாக சமூக நல்லிணக்க பேரவை பொது செயலாளர் மன்சூர் உசேன் சிறப்பு அழைப்பாளர்களாக அத்தாமஹால் உரிமையாளர் ஜாகிர் உசேன் அதிமுக விவசாய அணி சுலைமான் சமூக ஆர்வலர் சின்னவர் என்ற அஜ்மத் அலி திமுக மொழிப்போர் தியாகி கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு ஏழாவது முறையாக ஆதார் சிறப்பு திருத்த முகாம் நிகழ்ச்சி நடைபெற்றன..

தொடர்ந்து ஆயக்குடி பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்கள் பெயர் மாற்றம் குழந்தைகளுக்கு புதிய ஆதார் அட்டை எடுத்தல் புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக ஆயக்குடியில் இயங்கி வரும் ஆயை காயிதே மில்லத் சிறுபான்மை
சமூக சேவை அறக்கட்டளையின் மூலம் தொடர்ந்து மக்கள் பணி செய்து வருகின்றனர்.

ஆறு முறை சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு இதுவரை 980 நபர்கள் பயனடைந்துள்ளதாக அறக்கட்டளை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

மேலும் பொதுமக்களின் தேவைகள் அதிகரிப்பதால் தொடர்ந்து சேவை செய்யும் நோக்கில் அறக்கட்டளை மூலம் ஏழாவது முறையாக தற்போது தொடங்கப்பட்டு சேவை செய்து வருகின்றனர்.

இந்நிகழ்வில் சபிக் அகமது, அக்பர்அலி, பாரிஸ்அகமது, இமாம் மாமூன் ரஷீத்,
அபுல் கலாம் சர்தார், தென்றல் ஹக்கீம், உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஆதார் சிறப்பு திருத்த முகாம் நிகழ்ச்சி நடைபெற்றன…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *