March 4, 2026
பழனியில் இரவு ஒரு மணிக்கு மேல் அன் யூனிபார்மில் ரோந்து செல்லும் துணைக் கண்காணிப்பாளர் தனஜெயன்

பழனியில் இரவு ஒரு மணிக்கு மேல் அன் யூனிபார்மில் ரோந்து செல்லும் துணைக் கண்காணிப்பாளர் தனஜெயன்

பழனி : நவம்பர்,21.

திண்டுக்கல் மாவட்டம் பழனி காவல் துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் தனஜெயன் அவர்கள் இரவு 12 மணிக்கு மேல் அன் யூனிஃபார்மில் ரோந்து செல்வதாக கூறப்பட்டு வந்த நிலையில் பழனி அடிவார சாலையோர வியாபாரிகள் கடை போடுவதில் ஒரு சில தள்ளுமுள்ளு ஏற்பட்டதாக அவ் வழியாக சென்ற துணைக் கண்காணிப்பாளர் தனஜெயத்திற்கு தகவல் வந்தவுடன் உங்கள் அருகில் தான் இருக்கின்றேன் என்று கூறியவுடன் சாலையோரம் வியாபாரிகள் சற்றும் வியப்புடன் பார்த்தனர்.

அப்பொழுது பக்தர்கள் அதிகமாக வரும் இப்பகுதிகள் சாலை ஓரங்களில் கடைகள் அமைப்பதற்கு அனுமதி இல்லை போக்குவரத்து எந்த ஒரு இடையூறும் இல்லாமல் அனைவரும் கலைந்து செல்லுமாறு கேட்டுக்கொண்டனர்.

சற்று நேரத்தில் 50க்கும் மேற்பட்டோர் சண்டை இட்டு வந்த நிலையில் கலைந்து சென்றனர். அங்கு பணியாற்றிய காவலர்களிடம் திருவிழா ஆரம்பமாகிய காரணத்தால் இந்த இடம் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடம் என கூறினார்.

ஆதலால் இங்கு யாரும் கடை அமைக்க கூடாது என்று கூறிவிட்டு புறப்பட்டு விட்டார் இரவு நேரங்களில் அன் யூனிஃபார்மல் ரோந்து செல்லும் காவல்துறை துணை துணை கண்காணிப்பாளருக்கு பொதுமக்களும் சமூக ஆர்வலரும் பாராட்டுக்கள் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

பழனி நிருபர் : நா.ராஜாமணி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *