March 2, 2026
குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்

குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை சமாதானபுரத்தில் உள்ள சர்வைட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு அருள் சகோதரி மரிய சுதா அவர்கள் தலைமை தாங்கினார்கள்.

உதவி தலைமை ஆசிரியை அருள்ஜோதி அவர்கள் முன்னிலை வைத்தார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திருநெல்வேலி மாவட்டம் பேட்டை காமராஜர் நகர் மற்றும் மேல்நிலைப்பள்ளி முதுகலை பொருளாதார ஆசிரியர் பொன்னு சாமி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாணவர்கள் ஆசிரியர்கள் ஆகியோர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *