
நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியருக்கு மாநகரச் செயலாளர் நேரில் வாழ்த்து..
திருநெல்வேலி மாவட்டம் பேட்டை காமராஜர் நகர்மன்ற மேல்நிலைப்பள்ளி முதுகலை பொருளாதார ஆசிரியர் பொன்னுச்சாமி இவர் இந்த ஆண்டுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது 2025 பெற்றுள்ளார்.

இன்று அவரது இல்லத்திற்கு நேரடியாக சென்ற திருநெல்வேலி மேற்கு மாவட்ட மாநகரச் செயலாளர் திரு சுப்பிரமணியன் அவர்கள் நேரில் சென்று பொன்னாடை அணிவித்து இனிப்பு வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.






