March 2, 2026
மதுரை மாவட்ட கோயில்களில் ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேகம்.

மதுரை மாவட்ட கோயில்களில் ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேகம்.

சோழவந்தான்.

மதுரை அருகே விசாக நட்சத்திர ஸ்தலமாக விளங்கும் பிரளயநாத சிவன் ஆலயத்தில் அன்னாபிஷேகம் நடைபெற்றது.

முன்னதாக, பிரளயநாத சுவாமிக்கு, சிறப்பு அபிஷேகம் நடந்தது., இதையடுத்து, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இதில், தொழிலதிபர் எம்.வி.எம். மணி, கவுன்சிலர் வள்ளிமயில், நிர்வாக அதிகாரி ச. இளமதி, கணக்கர் சி. பூபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சோழவந்தான் அருகே தென்கரை அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாத சுவாமி திருக்கோவிலில் அன்னாபிஷேகம் நடைபெற்றது திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

சோழவந்தான் நவம்பர் 6

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை அருள்மிகு அகிலாண்டேஸ்வரி உடனுறை மூலநாதர் சுவாமி திருக்கோவில் ஐப்பசி மாத பௌர்ணமியையொட்டி அன்னாபிஷேகம் நடைபெற்றது.

சிவபெருமானுக்கு பால் தயிர் வெண்ணெய் மஞ்சள் பொடி மா பொடி திரவிய பொடி பன்னீர் இளநீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

தொடர்ந்து பக்தர்கள் வழங்கிய அரிசி மூலம் அன்ன அபிஷேகம் நடைபெற்று அன்ன அலங்காரத்தில் சிவபெருமான் காட்சி அளித்தார்.

காய்கறி மாலைகள் அணிவிக்கப்பட்டன. தொடர்ந்து வில்வத்தால் சிறப்பு அர்ச்சனை செய்து தீப ஆராதனை காட்டப்பட்டது.

பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகம், பிரதோஷ கமிட்டியினர், செய்திருந்தனர்.

இதில் முத்துக்குமரன் நகை மாளிகை இருளப்பன்ராஜா, சோலை கேபிள் ராஜா மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

உசிலம்பட்டி அருகே நூற்றாண்டு பழமை வாய்ந்த மீனாட்சியம்மன் சமேத ஐராவதேஸ்வரர் திருக்கோவிலில் ஐப்பசி பௌர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேகம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே ஆனையூரில் அமைந்துள்ளது நூற்றாண்டு பழமை வாய்ந்த மீனாட்சியம்மன் சமேத ஐராவதேஸ்வரர் திருக்கோவில், ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தை முன்னிட்டு, அன்னாபிஷேகம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

31 கிலோ அன்னம் மற்றும் காய்கறிகளை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன., மீனாட்சியம்மனுக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

இந்த அன்னாபிஷேக பூஜையில், உசிலம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமபுற பகுதிகளிலிருந்து ஏராளமான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அனைவருக்கும் கோவில் சார்பில் அன்னதானமும் பிரசாதமாக வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *