February 23, 2026
இந்தியாவில் ஆங்கிலேயரை எதிர்த்து வரி கொடுக்க மாட்டோம் என்று முதல் போராட்டம் நடத்திய பிரமலைக்கள்ளர் மக்கள் மீது தென்னிந்திய ஜாலியன் வாலாபாக் படுகொலை செய்தது ஆங்கிலேய அரசு தமிழக பாஜக மாநில செயலாளர் பேராசிரியர் ராம சீனிவாசன் பேச்சு.

இந்தியாவில் ஆங்கிலேயரை எதிர்த்து வரி கொடுக்க மாட்டோம் என்று முதல் போராட்டம் நடத்திய பிரமலைக்கள்ளர் மக்கள் மீது தென்னிந்திய ஜாலியன் வாலாபாக் படுகொலை செய்தது ஆங்கிலேய அரசு தமிழக பாஜக மாநில செயலாளர் பேராசிரியர் ராம சீனிவாசன் பேச்சு.

நிலக்கோட்டை, அக்.28-

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பிரமலைக்கள்ளர் மகளிர் அணி கூட்டமைப்பு சார்பில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 113 வது ஜெயந்தி விழாவும், 63வது குருபூஜையும் பற்றிய கருத்தரங்கம் நிலக்கோட்டை பிரமலைக்கள்ளர் கூட்டமைப்பு ராஜாராம் தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கருத்தரங்கத்தில் சிறப்பு அழைப்பாளராக பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயலாளர் பேராசிரியர் ராம சீனிவாசன் கலந்து கொண்டு பேசியதாவது:-

இந்தியாவிலேயே முதன்முதலாக சுதந்திரப் போராட்டத்திற்காக பல உயிர்களைப் பலி கொடுத்த ஒரு ஒப்பற்ற சமூகம், அப்படிப்பட்ட சமூகம் இன்றைக்கு பல்வேறு காலகட்டத்தில் கல்வி மற்றும் பொருளாதார நிலையில் பாவிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்தியாவில் ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஏகாதிபத்திய நாடாக கைப்பற்றிய போது வரி கொடுக்க வேண்டும் இந்திய மக்களை கட்டாயப்படுத்திய போது தென்னிந்தியாவில் நடத்திய ஜாலியன் வாலாபாக் படுகொலை பெருங்காமநல்லூர் படுகொலை ஆகும். இந்தப் பெருங்காமநல்லூர் போரில் மட்டுமல்ல தென் தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களை ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டு ரத்தம் சிந்தி உயிரை கொடுத்த இனம் . அந்த சமூகத்திற்கு முறையாக சட்டப்படி செய்ய வேண்டிய அனைத்தையும் பல்வேறு தரப்பினர் மூடி மறைத்து வரலாற்றை அழித்து இன்றைக்கு பிரமலைக்கள்ளர் சமூகம் கல்வியில் வளர்ச்சி பெற முடியாத அரசு ஒரு காரணமாக திகழ்கிறது. தமிழக அரசு டிஎன்டி சான்று வழங்குவதற்கு இத்தனை ஆண்டு காலம் இழுத்த அடிக்க வேண்டிய அவசியம் என்ன. டி என் டி யில் உள்ள 68 சமூகத்திற்கு டி என் டி என் சி என்று இரண்டு சான்றுகளை வழங்கினால் அது சரியா.

ஒன்னு ஆம்பளையா பொம்பளையா என்று கேட்டா ஒன்னும் ஆம்பளைன்னு சொல்லு இல்ல பொம்பளைன்னு சொல்லு. அளவெடுத்து ஆம்பள பொம்பள இப்படி இரண்டு அர்த்தத்தில் ஒரு சான்று கொடுத்தால் அந்த சமூகம் எப்படி கல்வியில் வளர்ச்சி பெறும.இதனை மனதில் வைத்துக் கொண்டு 2016 இல் இந்திய பாரத பிரதமர் டி என் டி காக ஒரு கமிஷன் அமைப்பு அந்த கமிஷன் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டு அது நடைமுறையில் கொண்டுவர பாடுபட்டுக் கொண்டிருக்கிறார். அதுமட்டுமல்ல டி என் டி சமூகத்தில் உள்ள மாணவர்களுக்கும், பெண்களுக்கும் கடன் உதவி உள்ளிட்ட பல்வேறு சட்டங்களை உருவாக்கி செயல்படுத்த உத்தரவிட்டுள்ளார். ஆனால் தமிழக அரசு டிஎன்டி மக்களுக்கு தேவையான சலுகைகளையும் உரிமைகளையும் வழங்க மறுத்து வருகிறது.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு இந்த தருணத்தில் ஒரு கோரிக்கை வைக்கிறேன் டிஎன்டி மக்களுக்கு உடனடியாக ஒற்றைச் சாதி சான்று வழங்க வேண்டும் என்றும், அதேசமயம் டி என் டி மக்கள் எம் பி சி இட ஒதுக்கீட்டில் தனி இட ஒதுக்கீடு இந்த 68 சமூகத்திற்கு வழங்க அரசாணை பிறப்பிக்க வேண்டும். அதை தவிர்க்கும் பட்சத்தில் வருகிற சட்டமன்றத் தேர்தலில் எங்களது தலைமையிலான கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் போது நிச்சயமாக இந்த அரசாணை பிறப்பித்து டிஎன்டி மக்களின் போராட்டத்திற்கு ஒரு நல்ல முடிவைக் கொண்டு வருவோம் என்று பேசினார். இக்கூட்டத்தில் பாஜக மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம், முன்னாள் எம்எல்ஏ அன்பழகன், டிஎன்டி மக்கள் முன்னேற்ற கழக நிறுவனர் அன்பழகன், இந்திய பார்வர்டு பிளாக் கட்சி நிறுவனர் சுரேந்திரன், பெருங்காமநல்லூர் வீரமங்கை அறக்கட்டளை நிர்வாகி செல்வ பிரித்தா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *