March 2, 2026
அதிமுகவுடன் விஜய் கூட்டணி அமைத்தால் எதிர்காலம் பிரகாசிக்கும் அகில இந்திய தமிழர் கழகம் முத்துக்குமார் அறிக்கை..

அதிமுகவுடன் விஜய் கூட்டணி அமைத்தால் எதிர்காலம் பிரகாசிக்கும் அகில இந்திய தமிழர் கழகம் முத்துக்குமார் அறிக்கை..

நாகர்கோவில் அக்டோபர் 26:
அதிமுகவுடன் விஜய் வருகிற சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்டால், தவெக வின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்று அகில இந்திய தமிழர் கழகத்தின் நிறுவனர் முத்துக்குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு குறுகிய காலமே உள்ளது.

எனவே பலரும் தங்களுக்கு தகுந்தாற்போல் கூட்டணி அமைப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

ஒரு கட்சியின் தலைவர் செய்தியாளர்களின் சந்திப்பின் போது,” விஜய் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் அது தற்கொலைக்கு சமம்” என்று பேசியிருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் விஜய் திமுக வுக்கு எதிராக தனித்து போட்டியிட்டால் எதிர்கட்சி தலைவராகலாம் என்றும் அவரது கருத்தை அறிவித்திருக்கிறார்.

இது விஜயை திசை திருப்பும் முயற்சி. விஜயிக்கும் அரசியல் தெரியும். அவர் விழிப்புணர்வுடன் தான் இருக்கிறார் என்பது அவரது செயல் பாட்டில் தெரிகிறது.

கரூர் சம்பவத்தில் பலியானவர்களுக்கு அறிவிக்க பட்ட நிவாரண தொகையை குடும்பத்தினரின் வங்கி கணக்கில் செலுத்தியிருப்பதின் மூலம் அனைத்து தரப்பு மக்களிடம் தவெக வுக்கு ஆதரவு பெருகியுள்ளது என்பது தெரிகிறது.

அதற்காக வருகிற சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட முடிவெடுத்தால், அது கானல் நீரில் படகு சவாரி செய்வது போல் ஆகிவிடும்.

அதே வேளை விஜய் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டால் எதிர்காலம் பிராகசிக்க கூடிய வாய்ப்புள்ளது.

இவ்வாறு முத்துக்குமார் அறிக்கையில் கூறியுள்ளார்.

அன்புடையீர், வணக்கம். இச் செய்தியை பிரசுரிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி..

சி.முத்துகுமார்,
நிறுவனர், அகில இந்திய தமிழர் கழகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *