
குலசேகரன் கோட்டையில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் சமுதாயக்கூடம் பூமி பூஜை :
வாடிப்பட்டி, அக்:25-
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூ ராட்சி 2வது வார்டு குலசேகரன் கோட்டை மீனாட்சியம்மன் கோவில் அருகில் அயோத்திதாஸ் பண்டிதர் திட்டத்தின் கீழ் ரூ.1 கோடி மதிப்பீட் டில் புதிய சமுதாயக்கூடம் கட்டிட கட்டுமான பணி பூமி பூஜை தொடக்க விழா நடந்தது.
இந்த விழாவிற்க்கு, பேரூராட்சித்தலைவர் மு. பால்பாண்டி தலைமை தாங்கி தொடக்கி வைத்தார்.
செயல் அலுவலர் ஜெயலட்சுமி, பேரூராட்சி துணைத் தலைவர் கார்த்திக், உதவி பொறியாளர் நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கவுன்சிலர் நல்லம்மாள் வரவேற்றார். இதில் ,இளநிலை உதவியாளர்கள் முத்துப்பாண்டி, கார்த்திக், மற்றும் மு.பா. பிரகாஷ், கோவில் திருப்பணிக்குழுவினர் சரண், இளங்கோவன், சேசு கிருஷ்ணன், ஜெயமணி, பாலசுந்தரம், பட்டர்கள் சுப்பிரமணி, கிருஷ்ணகுமார், உதவியாளர் நாகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், முன்னாள் கவுன்சிலர் பாலசுப்ரமணியம் நன்றி கூறினார்.






