
விமர்சனம் செய்பவர்களை அச்சுறுத்துகிறதா உயர்நீதிமன்றம்!?
உயர்நீதிமன்றம் தனது வரம்பை மீறி தவறு செய்துள்ளது என்று உச்ச நீதிமன்றம் கூறிய ஒரு வழக்கில், உயர்நீதிமன்றத்தின் தவறான தீர்ப்பை சமூக வலைதளத்தில் விமர்சனம் செய்ததற்காக ஒருவரை சிறையில் தொடர்ந்து 15 நாட்களுக்கு மேல் வைத்திருப்பது நியாயமா?
தமிழக காவல்துறையோ பழிவாங்க துடிக்கிறது. தமிழக அரசுக்கோ சுய உணர்வே இல்லை.
உயர்நீதிமன்றமாவது கருணையுடன் முதியவர் , ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி வரதராஜன் அவர்களை ஜாமீனில் விடுவிக்கலாமே? அவர் மரியாதை குறைவாகவோ அநாகரீகமாகவோ விமர்சனம் செய்யவில்லை என்றே கருதுகிறோம்..
தமிழக அரசின் மோசமான செயல்பாடுகளை தைரியமாக விமர்சனம் செய்வோரை இப்படியெல்லாம் அச்சுறுத்தி விட முடியாது என்பதை இந்த விடியா அரசு உணரும் காலம் விரைவில் வரும்…






