
வாடிப்பட்டியில் மாற்றுத்திறனாளிகள் இல்லத்தில் நலத்திட்ட உதவிகள்.
வாடிப்பட்டி, அக்.22-
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பொன்மலை அடிவாரத்தில் அன்பே கடவுள் பார்வையற்றோர் மாற்றுத் திறனாளிகள் இல்லத்தில் கே ஆர்.எம் ஆர் அறப்பணி இயக்கம் சார்பாக தந்தை ரங்கசாமி நினைவு தினத்தை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு சமூக ஆர்வலரும் பாரதிய ஜனதா கட்சி முன்னாள் ஓ.பி.சி அணி மாநிலத் துணைத் தலைவரும், இயக்க தலைவருமான கே.ஆர்.முரளி ராமசாமி பார்வையற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
அறப்பணி இயக்க செயலாளர் இலக்கியா முன்னிலை வகித்தார்.இல்ல செயலாளர் ஆசை தம்பி வரவேற்றார். இதில் பார்வையற்றோர் ஊனமுற்றோர் முதியோர் மாற்றுத்திறனாளி களுக்கு வேஷ்டி சேலை மாணவ மாணவிகளுக்கு சட்டை கால் சட்டை வழங்கப்பட்டது முடிவில் காப்பாளர் ராஜேஸ்வரி நன்றி கூறினார்.






