March 2, 2026
தடைபட்ட பாராம்பரிய திருவிழா.. பொறுப்பில்லாத அதிகாரிகளால் வேதனையில் பொதுமக்கள்..!

தடைபட்ட பாராம்பரிய திருவிழா.. பொறுப்பில்லாத அதிகாரிகளால் வேதனையில் பொதுமக்கள்..!

பொதுவாக மதுரை மாவட்டத்தில்ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுக்காமல் கெட்டுப் போகும் எண்ணத்தாலும், சரிநிகர் சகிப்புத்தன்மை இல்லாததாலும், வீம்பு வம்பு பேசுவதாலும் பாரம்பரிய மிக்க, வரலாற்று சிறப்புமிக்க எத்தனையோ பலதிருவிழாக்கள் தடை பட்டு அதை தடுத்தவர்கள் பொடிபட மீண்டும் கோலாகலமாக நடந்திருக்கிறது.

இதுபோல பல பாடங்கள் கற்றாலும் இன்னும் திருந்தாத உள்ளம் கொண்டு, வருந்தாத நெஞ்சம் கொண்டவர்களால் தற்போது தடைபட்டு போய் நிற்கிறது வாடிப்பட்டி அருகே உள்ள ஓர் அய்யனார் கோவில் திருவிழா.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட இயற்கை எழில் சூழ்ந்த வயல்வெளிகளுக்கு நடுவில் நீரேத்தான் மேட்டுநீரேத் தான் கிராமங்களுக்கு இடையி
ல் கையில் வீச்சருவாளுடன் வேல் கம்போடு சோனையும், கருப்பு சாமியும் பரிவார தெய்வங்கள் ளோடு வெளியில் நின்று காவல் காக்க ராஜ கம்பீரமாய் சாட்டைக் கம்போடு,உடலில் தெம்போடு, கண்களில் நெருப்போடு காக்கும் தெய்வமாம் ஆதி அய்யனார் அமர்ந்த கோலத்தில் எழுந்தருளி அருள் பாலித்து வருகிறார்.

சுமார் 500 வருடங்களுக்கு முன் பாரம்பரிய மிக்க இந்த பகுதியில் விவசாயத்தை தொழிலாக கொண்ட முன்னோர்களால் வழிபாடு செய்யப்பட்டு, புரட்டாசி அறுவடை காலங்களில் புத்தரிசி தான் படைத்து புது பொங்கல் தான் வைத்து புரட்டாசி பொங்கல் திருவிழாவை கொண்டாடி மகிழ்வார்கள்.

இது ஆண்டுதோறும் ஒவ்வொரு புரட்டாசி மாதத்தின் கடைசி வெள்ளி சனிக்கிழமை
களில் நடைபெறுவது வழக்கம்.

அதற்கு முன்பாக திருவிழா நடத்த கௌலியிடம் சகுனம் கேட்டு உத்தரவு வந்த பின்பு இயற்கையை போலவே எந்தவித பிரதி பலனும் எதிர்பாராமல் கிராம நலனுக்காக தானங்கள் வழங்கியவரின் பரம்பரை வாரிசுகளுக்கு சாதி மத பாகுபாடின்றி மரியாதை தான் செலுத்தி திருவிழா ஏற்பாடுகள் செய்வார்கள்.

இதில் முதல் நாள் வெள்ளிக்கிழமை நீரேத்தான் கிராமத்தின் மையத்தில் உள்ள அய்யனார் கோயில் வீட்டிலிருந்து ஆபரண பெட்டிஎடுத்து பரம்பரை பூசாரி தலையில் சுமந்து புறப்படுவார்.

அருளோடு அவர் தூக்கிச் செல்லும் பெட்டிக்கு வழி நெடுகிலும் உள்ள வீடு தோறும் வாசலில் வண்ணக் கோலமிட்டு வாழை மர தோரணங்கள்நட்டு வைத்து வாழைப்பழங்கள் சூறையிட்டு, செம்பு எடுத்து கரும்புச் சர்க்கரையில் சூடம் ஏற்றி வழிபட்டும், வெண்பட்டு துண்டு எடுத்து பெட்டியிலே தான் செலுத்தி பக்தர்கள் வெள்ளம் புடை சூழ பரிவார தெய்வங்கள் எழுந்தாட
நேர்த்திக் கடன்கள் எல்லாமே நேர்த்தியாக செலுத்திடுவார்கள்.

அந்தி பொழுது வந்து விளக்கேற்றி வெளிச்சம் தர சிறுவாலையில் எழுந்து நின்று புடை சூழ புறப்பட்டு வரவேற்க அந்தி அம்மனும் அய்யனாரும் இரு பெட்டி சந்திப்பும் அமர்க்களமாய சங்கமிக்கும் தனித்தனியாய் தான் செல்லும்.

3 கி.மீ.தூரம் ஆபரண பெட்டியோடு மக்களும் கோயிலை அடைவார். அய்யனாரின் பேரழகை கண்டிங்கு வியப்பார் பொங்கலிட்டு படையல் வைத்து வழிபாடு செய்திடுவார்.

இரண்டாம் நாள் சனிக்கிழமை வயல்வெளியில் பம்பரமாய், இயந்திரமாய் தான் உழைத்து விவசாயிக்கு துணை நின்று தோளோடு தோள் கொடுத்த எருதுகளின் இனமான வீரத்தை வெளிக்காட்ட, சிறுமலை ஓடையிலே சீறி வரும் பாம்பை போல வளர்ந்து நிற்கும் கோரை புல்லறுத்து வடமாக தான் புனைந்து தாதம்பட்டி நீரேத்தான் மந்தைமத்தி நடு கல்லில் ஒரு முனையை தான் பூட்டி, மறுமுனையை எருதுகளின் கழுத்தில் பூட்டி தென்னை மஞ்சில் களம் அமைத்து காளையோடு காளையர்களும் போட்டி போட்டு வீரம் காட்டி வெற்றி வாகை சூட்டிடுவார்.

புரட்டாசி மழை அதுவும் போட்டி போட்டு வந்தாலும் மிரண்டு போய் வேடிக்கை பார்த்து வியர்ந்து அதுவும் நின்றுவிடும். இயன்ற வரை ஒத்துழைக்கும்.

வெட்டவெளி மந்தையிலே வட்டமிட்டு மாட்டுவண்டிகளை சுற்றி அதை நிற்க வைத்து மேடை அமைத்து குடையோடு இட பிடித்து தொடக்கம் முதல் முடிவு வரை காலையிலே இடம் பிடித்து மாலையிலே முடியும் வரை சோறு தண்ணி இல்லாமல் ஆர்வத்தோடு பார்க்கும் கூட்டம்.

சுற்றி இருக்கும் தண்ணீர் தொட்டியிலும் மொட்டை மாடி வீடு களிலும் கூடிஅங்கு குவிந்து நிற்கும். பதினெட்டு பட்டி ஊரு சனம் கட்டுச் சோறு கட்டி வந்து கால் கடுக்க காத்து நிக்கும்.

மூத்தோர்கள் துணையோடு இளவட்ட முறுக்கு இளைஞ ரெல் லாம் பொறுப்போடு கட்டுப்பாடு தான் காத்து திருவிழாவை வழி நடத்தும்.

இரவெல்லாம் முளைப்பாரி பாடல் அதை தான் பாடி இளசுகளை உசுப்பேற்றும், காதாட்டி மூதாட்டி தானானே தான் பாடி இருக்கையில் ஒலி எழுப்பி வட்டமிட்டு சுற்ற வைக்கும் காண்பவரை சொக்க வைக்கும்.

மாமன் மகன் கண்ணெல் லாம் வண்டாகத்தான் மாறி அத்த மக அழகை எல்லாம் வலிக்காமல் தேன் எடுக்கும்.

சொந்த பந்தம் எல்லாரும் பொங்க வைக்க போவாங்க. ரெண்டு மணி ஆனாலும் திங்க அதை சொல்லுவாங்க.

தூரம் தொலைவிலிருந்து உறவுகளும் வருவாங்க கூடி மகிழ்ந்திருந்து பிரிஞ்சு தான் போவாங்க. அதை எண்ணி பார்க்கையிலே வருஷம் எல்லாம் நிமிசமாகும் நிமிசம் எல்லாம் வருசமாகும்.

இன்று யாரோ சிலரின் சுயநல சூழ்ச்சிக்காக, புரிதல் இல்லா கருத்து வேறுபாட்டிற்காக, சகிப்புத்தன்மை இல்லா சந்தோஷத்திற்காக, கெட்டுப் போகும் எண்ணம் கொண்ட விட்டுக் கொடுக்காத மனதிற்காக, வம்பையும் வீம்பையும் கொம்பாகக் கொண்டதற்காக
எங்கோ நடந்த சமநிலை சட்டசாட்சியை அறநிலையத்துறை அதிகாரிகளின் மெத்தனத்தால் தடைபட்டு போய் நிற்கிறது.

ஆண்டாண்டு காலமாய் பாரம்பரிய வழக்கப்படி தொன்று தொட்டு நடந்து வந்த திருவிழா.

தொண்டு உள்ளம் அதை மதித்து திருநீரும் துண்டு அதனை தான கொடுத்து நடத்தப்பட்ட திருவிழா.

உணர்வுகளை புரிந்து கொண்டு உணர்ச்சிகளை தெரிந்து கொண்டு கனவுகளை தான் களைத்தவர்கள் தனக்குள்ளே தான் சளைத்தவர்கள் எத்தனை காலத்துக்கு தடை செய்வார்கள் என்பதையும், இது போல எத்தனையோ பல ஏத்தாதி எத்தங்களையும் வித்தாதி வித்தங்களையும் பார்த்துவிட்டு இன்னும் பொறுமையோடு சுற்றிக் கொண்டு தான் இருக்கிறது இந்த பூமி.

கவிஞர் பொன்.பனகல் பொன்னையா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *