February 27, 2026
சேது பொறியியல் கல்லூரியில் தென் மாவட்ட பள்ளிகளுக்கான கலை மற்றும் திட்ட விலக்கப் போட்டிகள்..

சேது பொறியியல் கல்லூரியில் தென் மாவட்ட பள்ளிகளுக்கான கலை மற்றும் திட்ட விலக்கப் போட்டிகள்..

காரியாபட்டி:

மதுரை அருகே, உள்ள சேது பொறியியல் கல்லூரி நிர்வாகம் சார்பாக தென் மாவட்ட பள்ளி மாணவ மாணவிகளுக்கு கலை மற்றும் திட்ட விலக்க போட்டிகள் நடத்தப்பட்டது.

நிகழ்வை கல்லூரி நிறுவனர் மற்றும் தலைவர் எஸ் முகமது ஜலில் துவக்கி வைத்தார்.

இதில், சுமார் 30 பள்ளிகளில் இருந்து 800-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் பரதநாட்டியம் குழு நடனம் பாட்டு வாத்தியம் வாசித்தல் கவிதை பேச்சுப் போட்டிகள் மற்றும் திட்ட விலக்கப் போட்டிகள் பிரிவில் கணிதம் இயற்பியல் வேதியல் கணினி எரிசக்தி என, ஏழு தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் பரிசுகள் வழங்கப்பட்டது.

பரிசளிப்பு விழாவிற்கு, கல்லூரித்தலைவர் மற்றும் நிறுவனர் எஸ் முகமது ஜலீல் தலைமை ஏற்று, பரிசுகளை வழங்கினார்.

கல்லூரி நிர்வாக அதிகாரிகள் எஸ். எம். சீனி முகைதீன், எஸ். எம். சீனி முகமது அலியார் எஸ்எம் நிலோஃபர் பாத்திமா எஸ் எம் நாஸியா பாத்திமா முன்னிலை வகித்தனர்.

இதில், கலைப் போட்டிகளில், அ த் தியபனா பள்ளி முதல் இடத்திலும் திட்ட விலக்க போட்டிகளில் , டிவிஎஸ் பள்ளி முதலிடத்தில் சாம்பியன் பட்டத்தை பெற்றது மாணவ மாணவிகளுக்கு கல்லூரி நிர்வாகம் சார்பாக பேருந்து மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது.

நிகழ்வினை, முதல்வர் சிவகுமார் தலைமையில் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *