
வாடிப்பட்டியில் கூட்டுறவு சங்க பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் ஆர்ப்பாட்டம்.
வாடிப்பட்டி, அக்.9.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஒன்றிய அளவிலான கூட்டுறவு சங்க பணியாளர்கள் சம்பள கணக்கு, ப்ளூடூத் முறை அகற்றுதல், 2021 முதல் நிலுவையில் உள்ள ஓய்வூதியம் வழங்குதல் உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் போடிநாயக்கன்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் முன்பு செய்தனர். இந்த போராட்டத்தில், சங்க நிர்வாகிகள் மகேந்திரன் முருகன் கண்ணுச்சாமி ஜெயசீலன் செல்லப்பாண்டி உட்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி
கோசமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.






