
முன்னாள் அமைச்சர் அன்புமணி பிறந்த நாள்
காரியாபட்டி:
விருதுநகர் மாவட்டம் ஆவியூர் கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் சின்ன ஐயா அன்புமணி ராமதாஸ் அவர்களின் 57 -வது பிறந்த நாளை முன்னிட்டு,
காரியாபட்டி ஒன்றிய செயலாளர் ஆவியூர் பாண்டிச் சாமி தலைமையில் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் சின்னையா அன்புமணி ராமதாஸ் அவர்களின் 57வது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மேலும், பாட்டாளி மக்கள் கட்சியின் சொந்தங்கள் அவரது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் மற்றும் இனிப்புகள் வழங்கியும் பல்வேறு நலத் திட்ட உதவிகளையும் செய்து வருகின்றனர்.
அதனை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம், ஆவியூர் கிராமத்தில் காரியாபட்டி ஒன்றியச் செயலாளர் ஆவியூர் பாண்டிச்சாமி தலைமையில் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
மேலும், இந்த நிகழ்வில் கிளைச் செயலாளர் சலுகை மணி, விருதுநகர் கிழக்கு மாவட்ட துணை செயலாளர் சக்கையா, உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






