March 2, 2026
காரியாபட்டி ஒன்றியத் தில் சுற்றுச் சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி 50 - ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டம் துவக்கம்...

காரியாபட்டி ஒன்றியத் தில் சுற்றுச் சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி 50 - ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டம் துவக்கம்...

காரியாபட்டி – அக்.8.

காரியாபட்டி ஒன்றியத்தில், மரக்கன்றுகள் நடும் திட்டம் துவங்கப் பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம், சீட்ஸ் நிறுவனம் சார்பாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு வலியுறுத்தி 50 ஆயிரம் மரக்கன்று கள் நடுவதற்கு ஏற்பாடு செய்துள்ளது.

காரியாபட்டி நரிக்குடி, மற்றும் திருச்சுழி ஒன்றியங் களில் உள்ள விவசாயிகள்
தங்கள் விளை நிலங்க ளில் மரங்கள் வளர்க்க மரக்கன்றுகள் வழங்கப் பட்டு வருகிறது.

ஒன்றியங் களில் 50, ஆயிரம் மரக்கன்று கள் நடுவதற்கு திட்டமிடப் பட்டுள்ளது இந்த திட்டத்தின் துவக்க நிகழ்ச்சி காரியாபட்டி பி. புதுப்பட்டி கிழவ னேரி கிராமங் களில் நடை பெற்றது.

திட்டத்தை, தொடங்கி வைத்த சீட்ஸ் நிறுவன இயக்குநர் பாண்டி யன் கூறிய தாவது:
விருதுநகர் மாவட்டத்தில், காரியாபட்டி திருச்சுழி , பகுதியில் உள்ள விவசாயிகள் இந்த திட்டத்தில் பங்கேற்லாம் தற்போது மகோ கனி, தேக்கு, வேம்பு புங்கை, பூவரசு நாவல், வாகை பாதம், சிகப்பு கொன்றை போன்ற மரக்கன்று கள் தயாராக உள்ளது.

விவசாயிகள் பயன் படுத்திக் கொள்ள வேண்டுமாய் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

சீட்ஸ் நிறுவன செயல் அலுவலர் சிவக்குமார் மற்றும் களப் பணியாளர கள் விவசாயிகள்
பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *