March 4, 2026
இராமநாதபுரம் 🔰 தேவர் 🔰 சமூகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் மீது விசிகவினர் கொடூரத் தாக்குதல்!.

இராமநாதபுரம் 🔰 தேவர் 🔰 சமூகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் மீது விசிகவினர் கொடூரத் தாக்குதல்!.

சென்னை உயர் நீதிமன்ற வளாகம் அருகே, பட்டப்பகலில் வழக்கறிஞர் ஒருவர் மீது விசிகவினர் கொடூரமாகத் தாக்கியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாக்குதலுக்கு உள்ளானவர், இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தேவர் சமூகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் திரு. ராஜீவ் காந்தி தேவர் ஆவார்.

விசிக தலைவர் திரு. தொல். திருமாவளவன் பயணித்த கார், வழக்கறிஞர் ராஜீவ் காந்தி மீது மோதியுள்ளது.

இதை அவர் தட்டிக்கேட்ட ஒரே காரணத்திற்காக, காரில் இருந்து இறங்கிய விசிக குண்டர்கள் அவரை சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

இந்தியத் தலைமை நீதிபதி மீதான தாக்குதலைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு திரு. திருமாவளவன் திரும்பியபோது, அவருடன் வந்தவர்களே ஒரு வழக்கறிஞரைத் தாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சட்டத்தின் காவலரான ஒரு வழக்கறிஞருக்கே இந்த நிலை என்றால், சாமானிய மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

கண்டன அறிவிப்பு: நமது சமுதாயத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் அண்ணன் ராஜீவ் காந்தி அவர்களை விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சார்ந்த குண்டர்களால் சென்னை உயர்நீதிமன்ற அருகாமையில் பார் கவுன்சில் வாசலிலே கொடூரமாக தாக்கியுள்ளனர்.

இந்த தாக்குதலில் அவர் பலத்த காயமடைந்து தற்போது சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனை முக்குலத்தோர் சட்ட இயக்கத்தின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *