March 2, 2026
இந்திய கலாச்சார நட்புறவு கழகத்தின் நிர்வாகிகள் கூட்டத்தில் கரூர் சம்பவத்திற்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி..!

இந்திய கலாச்சார நட்புறவு கழகத்தின் நிர்வாகிகள் கூட்டத்தில் கரூர் சம்பவத்திற்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி..!

மதுரை:

இந்திய கலாச்சார நட்புறவுக்கழகத்தின் தமிழ்நாடு மாநில நிர்வாகக்குழுக்கூட்டம் மதுரை சிம்மக்கல் அருகே உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது.

இதில், அமைப்பின் மாநிலத் தலைவர் ராஜரத்தினம், பொதுச் செயலாளர் ராதாகிருஷ்ணன், துணைப் பொதுச் செயலாளர் பாஸ்கரன், இந்திரஜித், யுசிபிஐ, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இஸ்கஃப் நிர்வாகிகள் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், கரூரில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜயின் தேர்தல் பிரச்சாரத்தின்
போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்ததற்காகவும், மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடக்கும் போரை நிறுத்தக்கோரியும், போரில் உயிரிழந்தவர்களுக்காகவும் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும், கூட்டத்தில் கரூர் சம்பவம் போல் மீண்டும் நடக்காமல் இருக்க திரைக்கவர்ச்சியை நோக்கி செல்லும் சமுதாய இளைஞர்களுக்கு கல்லூரிகளில் சென்று அரசு விழிப்புணர்வை உருவாக்கி பயிற்சி அளிக்க வேண்டும், பெடல் காஸ்ட்ரோ நூறாவது பிறந்தநாள் விழா தமிழ்நாடு முழுவதும் கொண்டாட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இயற்றப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *