March 2, 2026
குலசேகரன்கோட்டையில் நாம் தமிழர் கட்சி உறுப்பினர் சேர்க்கை மக்கள் சந்திப்பு முகாம்..

குலசேகரன்கோட்டையில் நாம் தமிழர் கட்சி உறுப்பினர் சேர்க்கை மக்கள் சந்திப்பு முகாம்..

வாடிப்பட்டி, அக்.7-
மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளராக நாகலட்சுமி திருமாறனை கட்சி நிறுவன தலைவர் சீமான் அறிவித்தார்.

இந்நிலையில் நேற்று வாடிப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 2வது வார்டு குலசேகரன்கோட்டையில் நாம்தமிழர் கட்சிவேட்பாளர் நாகலெட்சுமி திருமாறன் தலைமையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.

இதில் குலசேகரன்கோட்டை கிளை பொறுப்பாளர் சந்திரன் உட்பட கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் 12ஆண்கள், 6 பெண்கள் என மொத்தம் 18 பேர் நாம்தமிழர் கட்சியில் இணைந்தனர்.

அதன் பின் நடந்த மக்கள் சந்திப்பு முகாமில் பொதுமக்களிடம் வீடு வீடாக சென்று தான் சட்டமன்ற உறுப்பினரானால் தொகுதிக்கு செய்யும் நலத் திட்டங்கள் குறித்துதுண்டு பிரசுரம் வழங்கி விளக்கி கூறி கலந்துரையாடினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *