
தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் மாணவருக்கு கல்வி கட்டணம் அன்பளிப்பு!
திண்டுக்கல் மாவட்டம் , பழனி அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு தகவல் தொழில்நுட்பத் துறையில் பயிலும் M. சத்தீஸ்வரன், P.சுந்தர் , மற்றும் மூன்றாம் ஆண்டு தகவல் தொழில்நுட்பத் துறையில் பயிலும் V. ஸ்ரீகாந்த் ஆகிய மூன்று மாணவருக்கும் கல்வி கட்டணமாக ரூபாய் 16000/- தொகையை தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் K.சபரி அவர்கள் நேரில் வந்து செலுத்தினார்.
மாணவர்களுக்கு கல்விக்காக செலவிடுவதன் முயற்சியில் இதுபோன்ற சமூக பணிகள் செய்து வருவதாக கூறப்படுகிறது. தொடர்ந்து இந்த கல்வி ஆண்டில் இரண்டாவது முறையாக மாணவர்களுக்கு கல்வி கட்டணம் செலுத்திய சபரி அவர்களுக்கு தகவல் தொழில்நுட்ப துறையின் ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்கள் சார்பில் நன்றி தெரிவித்தனர்.






