March 2, 2026
அறிவிப்பு இல்லாத சாலை பணிகளால் விபத்து ஏற்படும் அபாயம்! அத்துமீறும் மடத்துக்குளம் உதவிப் பொறியாளர்!

அறிவிப்பு இல்லாத சாலை பணிகளால் விபத்து ஏற்படும் அபாயம்! அத்துமீறும் மடத்துக்குளம் உதவிப் பொறியாளர்!

உடுமலை : 06

கடந்த சனிக்கிழமை அன்று மாலை உடுமலை தாராபுரம் சாலையில் பாதுகாப்பு வசதிகள் இல்லாமல் சாலையின் குறுக்கே குழி தோண்டி பைப் லைன் பணிகள் செய்யப்பட்டது.

அந்த சமயத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அல்லது நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் என கண்காணிப்பு பணியில் யாரும் இல்லாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பொதுவாக சாலையில் பணிகள் செய்யும் முன்னர் குறிப்பிட்ட தூரத்தில் வாகன ஓட்டிகள் கவனத்திற்காக எச்சரிக்கை பதாகைகள் வைக்கப்பட வேண்டும்.

ஆனால் , அப்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் இல்லாமல் அதிகளவில் வாகனங்கள் சென்று வரும் முக்கிய வழித்தடமான தாராபுரம் உடுமலை சாலையில், சாலை பணிகளை செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது‌.

தமிழ்நாட்டில் சாலை பணிகளின் போது ஏற்படும் விபத்துகள் அதிகம். அதனை கட்டுப்படுத்துவதில் நெடுஞ்சாலைத்துறைக்கு முக்கிய பங்கு உள்ளது‌. நீதிமன்றங்களில் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க போதுமான அறிவுறுத்தல்கள் இருந்தாலும் அதனை அரசு துறை சார்ந்த அதிகாரிகள் பின்பற்றுவதில்லை. சாலையின் குறுக்கே தோண்டப்படும் குழிகளால் பல்வேறு விபத்துகள் ஏற்படுவதை தொடர்ந்து நீதிமன்றங்களில் வழக்குகள் நடந்து வருகின்றன.

அதனையும் பொருட்படுத்தாமல் அதிகாரிகள் தங்களது இஷ்டத்திற்கு சாலையின் நடுவே குழியை தோண்டி பராமரிப்பு பணிகளை செய்து வருவது அதிகரித்துள்ளது. இதனை உயர் அதிகாரிகள் கட்டுப்படுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் அசம்பாவிதங்கள் நிகழக் கூடும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

மேலும் மடத்துக்குளம் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் பணியாற்றி வரும் உதவிப் பொறியாளர் மகேந்திரன் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன நிலையில், மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *