
காந்தி ஜெயந்தி..!
அலங்காநல்லூர் –
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் பஸ் நிலையம் அருகில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக காந்தி ஜெயந்தி விழா நடந்தது. இதற்கு, மாவட்டத்தலைவர் ஆலாத்தூர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கி, காந்தி படத்திற்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார்.
மாநில பொதுக் குழு உறுப்பினர் நூர்முகமது, வட்டார தலைவர்கள் சுப்பா ராயலு, காந்திஜி, மனித உரிமை கழகம் ராஜேஸ்வரன் , நிர்வாகி ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில், மகளிர் அணியினர், மற்றும் காங்கிரஸ் கட்சியின் மதுரை மேற்கு, வாடிப்பட்டி நிர்வாகிகள்,முருகன், திரவியம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக,
மத்திய அரசைக் கண்டித்து கையெழுத்து இயக்கமும் நடந்தது.






