March 2, 2026
மதுரை கோயில்களில் சனி மஹா பிரதோஷம்..

மதுரை கோயில்களில் சனி மஹா பிரதோஷம்..

மதுரை :

மதுரை மாவட்டத்தில் உள்ள சிவ ஆலயங்களில் அக்.4.ம் தேதி சனிக்கிழமை மாலை 4.30. மணிக்கு சனி மஹா பிரதோஷ விழா நடைபெறுகிறது.

மதுரை அருகே சோழவந்தான் பிரளயநாதர் சிவன் ஆலயம், திருவேடகம் ஏடகநாதர், தென்கரை மூலநாதர், மதுரை அண்ணாநகர் சர்வேஸ்வர ஆலயம், தாசில்தார் நகர் சித்தி விநாயகர் ஆலயம், வரசித்தி விநாயகர், சௌபாக்ய விநாயகர், திருமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர், துவரிமான் மீனாட்சி சுந்தரேஸ்வரர் உள்ளிட்ட ஆலயங்களில் சனி மஹா பிரதோஷத்தை முன்னிட்டு, நந்திகேஷ்வரன், சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அர்ச்சணைகள் நடைபெறுகிறது.

இதையடுத்து, சிவபெருமான், அம்பாள் ரிஷப வாகனத்தில் அலங்காரமாகி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.

இதற்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *