March 3, 2026
திண்டுக்கல் மாவட்டத்தில் காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு அனைத்து விதமான மதுபானக் கடைகள் மூடப்படும் - மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்டத்தில் காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு அனைத்து விதமான மதுபானக் கடைகள் மூடப்படும் - மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்டத்தில், தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) சட்டம் 1981-ன் கீழ் உரிமம் பெற்று இயங்கி வரும் எப்.எல்.1 உரிமம் பெற்ற டாஸ்மாக் சில்லரை விற்பனை மதுக்கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள், எப்.எல்.2, எப்.எல்.3, எப்.எல்.3ஏ, எப்.எல்.3ஏஏ மற்றும் எப்.எல்.11 உரிமம் பெற்ற உரிமத்தலங்கள் அனைத்தும், 02.10.2025 (வியாழக்கிழமை) காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு மூடப்பட்டிருக்கும்.

அன்றைய நாளில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படமாட்டாது. மேலும், அன்றைய தினத்தில் விதிகளுக்கு மாறாக மது விற்பனை ஏதும் செய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

பழனி நிருபர் : நா.ராஜாமணி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *