
இராமேஸ்வரத்தில் மாவட்டக் கழகச் செயலாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்
இராமநாதபுரம் மாவட்டத்தில் , மாவட்ட கழக செயலாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் தலைமையிலும், நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வனத்துறை மற்றும் கதர் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அவர்களது தலைமையிலும் இராமேஸ்வரம் நகரச் செயலாளர் நாசர்கான் அவர்களின் முன்னிலையிலும், இராமேஸ்வரம் பகுதி தலைவர் போஸ் தேவர் தலைமையிலும், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் தங்கள் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர்.
இந்த நிகழ்வில், புதியதாக இணைந்த உறுப்பினர்களுக்கு திமுகக் கொடி மற்றும் பொன்னாடை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. மாவட்டச் செயலாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் உரையாற்றியபோது, “திமுக அரசு மக்களுக்காக பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கல்வி, மருத்துவம், பெண்கள் உரிமை, இளைஞர் நலன், மீனவர்கள் நலன் என அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் ஏற்படுகிறது. இதை உணர்ந்து மக்கள் தினந்தோறும் திமுகவில் இணைந்து வருகின்றனர். இன்று இணைந்த தோழர்களின் வருகை, கட்சியின் வலிமையை மேலும் உயர்த்தும்” எனக் கூறினார்.
அதேபோல நகரச் செயலாளர் நாசர்கான், “மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி திமுகவின் மக்கள் பணி, சமூக நீதி, வளர்ச்சி திட்டங்களை நம்பி எங்கள் அணியில் இணைந்துள்ள அனைவரையும் மனமுவந்து வரவேற்கிறோம்” என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் இராமேஸ்வரம் பகுதியின் பல்வேறு கிளைச் செயலாளர்கள், இளைஞர் அணி, மகளிர் அணி, தொழிற்சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு உற்சாகமாக பங்கேற்றனர்.






