March 2, 2026
பெருநாழி மின் பிரிவுக்விக்குட்பட்ட கோவிலாங்குளம் பகுதிகளில் தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் பெரும் அவதி

பெருநாழி மின் பிரிவுக்விக்குட்பட்ட கோவிலாங்குளம் பகுதிகளில் தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் பெரும் அவதி

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் பெருநாழி மின் பிரிவுக்குட்பட்ட கோவிலாங்குளம் பகுதியில் சுமார் 70 கிராமங்களுக்கு மேலாக குறைந்த மின்னழுத்தத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வருகிறது.

இதனால் அன்றாட வாழ்வில் பயன்படுத்தக்கூடிய மின்விளக்கு மற்றும் மின்சாதன பொருட்கள் பயன்படுத்துவதில் மக்களுக்கு பெரும் சிரமமாக உள்ளது.முக்கியமாக விவசாயிகள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.

இது குறித்து அதிகாரிகளியிடம் கேட்டரிந்த நிலையில் கோவிலாங்குளத்தில் துணை மின் நிலையம் அமைத்தால் சரி செய்து விடலாம் எனக்கூறி வந்தனர்.அப்பகுதியில் அதற்கான இடவசதி செய்து ஒதுக்கப்பட்டு தமிழக அரசு சட்டசபையில் தீர்மானமும் இயற்றியும் இது வரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கமுதி மின் நிலையத்திலிருந்து கோவிலாங்குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு மின்வழித்தடம் 45 கிலோமீட்டர் சுற்றளவில் இருந்து வருகிறது.
ஒரு சிறு மின்தடை ஏற்பட்டால் கூட அதனை சரிசெய்ய 8 லிருந்து 12 மணி நேரத்திற்கு மேல் ஆகிறது. இப்பகுதி மக்கள் மழைக்காலங்களில் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர்.

இந்த துணை மின்நிலையம் அமைப்பது குறித்து பலமுறை பத்திரிக்கை செய்தியாக வெளிவந்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காததால் பொதுமக்கள் குற்றச்சாட்டாக
வைக்கின்றனர்.

ஆகவே இருளில் வாழும் மக்களுக்கு உடனடியாக கோவிலாங்குளத்தில் அரசு துணை மின் நிலையம் அமைத்து தர மாவட்ட ஆட்சியர் விரைவில் நடவடிக்கை எடுக்கும்படி இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *