
கும்மிடிப்பூண்டி அருகே டாஸ்மாக் கடை ஷட்டரில் துளையிட்டு கொள்ளை முயற்சி. காவல்துறை ரோந்து பணியின் போது டாஸ்மாக் கடையில் திருட முயன்ற நபரை பிடித்து விசாரணை….
கும்மிடிப்பூண்டி, செப். 29:
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த தச்சூர் பகுதியில் அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது.
பொதுமக்கள் நடமாட்டம் சற்று குறைந்த வயல்வெளியை ஒட்டி கவரைப்பேட்டை காவல் நிலையத்தின் எதிரே உள்ள சாலையில் டாஸ்மாக் கடை இயங்கி வந்த வந்த நிலையில் இன்று அதிகாலை இந்த டாஸ்மாக் கடையில் ஞாயிற்றுக்கிழமை விற்பனையை முடித்து விட்டு அதன் ஊழியர்கள் கடையை பூட்டி கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளனர்.
நள்ளிரவில் காவல்துறையினரின் வழக்கமான ரோந்து பணியின் போது டாஸ்மாக் கடை ஷட்டரில் துளை உள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் அங்கு பார்த்த போது மர்ம நபர் ஒருவர் இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபரை லாவகமாக பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
இதில் அமரம்பேடு பகுதியை சேர்ந்த வினோத் 30 என்பதும், பேட்டரியில் இயங்கும் சிறிய ரக வெல்டிங் இயந்திரத்தை கொண்டு டாஸ்மாக் கடை ஷட்டரில் துளையிட்டு கொள்ளையடிக்க முயன்றது தெரிய வந்தது.
மேலும் இதே போன்று பல்வேறு டாஸ்மாக் கடைகளில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர் என தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து கவரைப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காவல்துறையினர் கொள்ளை சம்பவத்திற்கு முன்பே டாஸ்மாக் கடைக்கு வந்ததால் அதிலிருந்த விற்பனை பணம், மது பாட்டில்கள் தப்பியது.






