March 2, 2026
மதுரை கோயில்களில் நவராத்ரி விழா...

மதுரை கோயில்களில் நவராத்ரி விழா...

மதுரை :

மதுரை மாவட்ட கோயில்களில் நவராத்ரியை முன்னிட்டு, அம்மன் அலங்காரத்தில் காட்சி அளித்தார்.

மதுரை அருகே சோழவந்தான் பிரளயநாத சிவன் ஆலயத்தில், அம்மன் ராஜ ராஜேஸ்வரி அலங்காரத்தில் காட்சி அளித்தார்.

ஜெனைகை மாரியம்மன், ஜெனி நாராயணப் பெருமாள், தென்கரை மூலநாதர், மதுரை அண்ணாநகர், தாசில்தார் நகர் சித்தி விநாயகர், வரசித்தி விநாயகர், வைகை காலனி வைகை விநாயகர், வைகை காலனி மேற்கு அம்மன் கோயில்களில் நவராத்ரி பூஜைகள் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், பட்டி வீரன் பட்டி மாரியம்மன் கோயிலில், நவராத்ரியை ஒட்டி சிவாச்சாரியார்கள், அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்களை செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *