
பசும்பொன் குருபூஜை முன்னேற்பாடில் காவல்துறையின் விழிப்புணர்வு நடவடிக்கைகள்.
இராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் கோவிலாங்குளம் காவல்நிலைய அதிகாரிகள், பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர் குருபூஜையை முன்னிட்டு தங்களது சரகத்திற்குட்பட்ட கிராமங்களில் மக்கள் தொடர்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மாவட்ட நிர்வாகம் விதித்துள்ள சட்ட நடவடிக்கைகள் குறித்து மக்களை நேரடியாக சந்தித்து விளக்கி கூறும் பணியில், கோவிலாங்குளம் துணை சார்பு ஆய்வாளர் சண்முகவேலு, எஸ்.பி.சி.ஐ.டி முருகநாதன் மற்றும் காவலர் பூவலிங்கம் பங்குபெற்றனர்.
இதன் ஒரு பகுதியாக, கமுதி அருகே பறையாங்குளம் கிராமத்தில் இளைஞர்களும், மூத்தோர்களும் ஒருங்கிணைக்கப்பட்டு, அமைதியான சூழலில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பசும்பொன் குருபூஜை சிறப்பாகவும், சட்டம்-ஒழுங்குடன் நடைபெற காவல்துறையினர் மேற்கொண்டுள்ள இந்த முன்னோடியான நடவடிக்கைகள், பொதுமக்களின் நம்பிக்கையையும் ஒத்துழைப்பையும் அதிகரித்துள்ளன.






