
நல்லாசிரியரின் இல்லத்திற்கு சென்று பாராட்டிய சிங்கம்பாறை அரசு ஆசிரியர்
திருநெல்வேலி மாவட்டம் பேட்டை காமராஜர் நகர்மன்ற மேல்நிலைப் பள்ளியில் முதுகலை பொருளாதார ஆசிரியராக இருப்பவர் திரு பொன்னுசாமி இவர் 2025 ஆம் ஆண்டுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதினை வென்றுள்ளார்.
சிங்கம்பாறை புனித பவுல் மேல்நிலைப்பள்ளி முதுகலை பொருளாதார ஆசிரியர் திரு ஸ்டான்லி ஜோன்ஸ் , ஆங்கில ஆசிரியர் திரு இமானுவேல் ஆகியோர் ஆசிரியர் இல்லத்திற்கு நேரடியாக சென்று பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
அப்போது காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப்பள்ளி ஓவிய ஆசிரியர் திரு மாரியப்பன் உடன் இருந்தார்.






