
பழனி காவல் நிலையத்தில் இடப்பிரச்சினை சம்பந்தமாக மூதாட்டி தீக்குளிக்க முயற்சி....
திண்டுக்கல் மாவட்டம் பழனி 24 வது வார்டு ராமர் தெருவில் வசித்து வருபவர்கள் தண்டபாணி குடும்பத்தினர். இவர்கள் சுமார் 60 வருடங்களுக்கு மேலாக அங்கு வசித்து வருவதாக கூறப்படுகிறது.
முன்னதாக இவர்கள் வசித்து வரும் வீட்டிற்கு மின்சார கட்டணம் வீட்டு வரி போன்றவை செலுத்தி வரும் நிலையில் பட்டா வேண்டி மனு செய்துள்ளனர்.
இதற்கிடையே இவர்கள் வீட்டின் அருகே செந்தில் ,சுமதி என்பவர்கள் வீடு கட்டுவதற்காக போர்வெல் அமைத்துள்ளனர். இந்நிலையில் அந்த அதிர்வின் காரணமாக தண்டபாணியின் வீட்டின் சுவர் விரிசல் விழுந்துள்ளது.
இதனால் இவர்கள் வீட்டை சரி செய்ய முயற்சி செய்துள்ளனர். அப்பொழுது செந்தில் தரப்பினர் இவர்களை வீட்டை சரி செய்ய விடாமல் தடுத்துள்ளனர் .மேலும் அடியாட்களை வைத்து வீட்டை காலி செய்து இங்கிருந்து சென்று விட வேண்டும் என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
தொடர்ந்து தண்டபாணி குடும்பத்தினர் அப்பகுதி கவுன்சிலர் சாகுல் ஹமீதிடம் தெரிவித்துள்ளனர். ஆனால் அவர் செந்தில் குடும்பத்தினருக்கு உதவும் வகையில் நடந்துள்ளார் என தண்டபாணி தரப்பினர் தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக இந்த வீட்டின் பிரச்சினை மற்றும் செந்தில் குடும்பத்தினர் மிரட்டுவது சம்பந்தமாக பலமுறை காவல்துறையில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி ,இன்று தண்டபாணியின் தாயார் பஞ்சவர்ணம் பழனி துணை காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்தார்.
இதனைத் தொடர்ந்து அங்கு இருந்த காவலர்கள் அவரை தடுத்து மண்ணெண்ணெய் கேனை பறித்தனர்.
மேலும் பழனி துணை காவல் கண்காணிப்பாளர் இது சம்பந்தமாக நடவடிக்கை எடுப்பதாகவும் அவர்களிடம் உறுதி அளித்தார்.
முன்னதாக பழனி நகர காவல் நிலையத்தில் மூதாட்டி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பகுதியில் பெயரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






