March 4, 2026
ஒன்பதாவது முறையாக பாஜகவின் மாநில மகளிர் அணி பொருளாளர் மாலினி ஜெயச்சந்திரன் கருப்பு பணத்தில் வாங்கப்பட்ட சொத்து பத்திரங்கள் தமிழர் முன்னேற்ற ப்படை கண்டுபிடித்தது !

ஒன்பதாவது முறையாக பாஜகவின் மாநில மகளிர் அணி பொருளாளர் மாலினி ஜெயச்சந்திரன் கருப்பு பணத்தில் வாங்கப்பட்ட சொத்து பத்திரங்கள் தமிழர் முன்னேற்ற ப்படை கண்டுபிடித்தது !

பாஜகவின் மாநில மகளிர் அணி பொருளாளர் மாலினி ஜெயச்சந்திரன் இன்று காலகட்டத்தில் 2016 இல் இருந்து 2022 காலகட்டத்தில் சுமார் 7000 கோடி க்கு அசையா சொத்துக்கள் உள்ளது.

என்று மாலினி மற்றும் அவர்கள் குடும்பத்தாரின் பெயரில் பினாமியாக வாங்கப்பட்டுள்ளது.

என்று தமிழர் முன்னேற்ற படைக்கு வந்த தகவலின் அடிப்படையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக எட்டு முறை சொத்து பத்திரங்களை கண்டுபிடித்து வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு இயக்குனர் அலுவலகத்தில் சுமார் 5000 கோடி மதிப்பிலான சொத்து பத்திரங்களை புகார் மனு அளித்து ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று ஒன்பதாவது முறையாக மாலினி பெயரில் சுமார் 100 கோடி மதிப்பிலான சொத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதன் சொத்து பத்திரங்களும் எடுக்கப்பட்டுள்ளது இப்பத்திரங்களை வருகின்ற 16.9.2025 காலை 11:30 மணியளவில் வருமானவரித்துறை புலனாய் பிரிவு இயக்குனர் அலுவலகத்தில் எமது தமிழர் முன்னேற்ற படை சார்பாக புகார் மனு அளித்து சொத்து பத்திரங்களை ஒப்படைக்க உள்ளோம்.

இந்த நிலையில் இந்தியாவின் அனைத்து புலனாய்வு பிரிவு அமைப்புகளையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும் அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை அவர்களுக்கும் மாலினி ஜெயச்சந்திரன் பெயரில் இருக்கும் இந்த 7000 கோடி கருப்பு பணத்தில் வாங்க ப்பட்ட சொத்துக்கள் இவர்களுக்கு தெரியாதா? என்று நாட்டு மக்களும் தமிழர் முன்னேற்ற படையும் கேள்வி எழுப்புகின்றது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியா இருந்த அண்ணாமலை அவர்களும் அப்பாவிகளா?

நாட்டு மக்கள் எழுப்புகின்ற மற்றொன்று கேள்வி என்னவென்றால். இந்த கருப்பு பணத்தில் வாங்கப்பட்ட சொத்து விவரம் ஒன்று இவர்களுடைய சொத்துக்களாக இருக்க வேண்டும்.

இல்லை இவர்களுக்கு வேண்டப்பட்டவர்களின் சொத்துக்களாக இருக்க வேண்டும்.

அதனால் தான் மாலினி ஜெயச்சந்திரனை இவர்கள் பாதுகாக்கிறார்கள்..

இருந்தாலும் இந்த சூழ்ச்சிகளையும் தகர்த்தெறிந்து இந்த கருப்பு பணம் சுமார் 7000 கோடி யாருடைய பணம் என்று விரைவில் கண்டுபிடித்து நாட்டு மக்களுக்கு தமிழர் முன்னேற்ற படை உரிய ஆதாரங்களோடு தெரியப்படுத்தும்.

மேற்கண்ட சொத்துக்களை நாட்டோடமையாக்கி அந்த சொத்துக்கள் அனைத்தையும் மக்களுக்கானதாக்க அனைத்து சட்டபூர்வமான நடவடிக்கையும் மேற்கொள்ளும் அரசியல் ரீதியான நடவடிக்கையும் மேற்கொள்ளும் என்பதனை நாட்டு மக்களுக்கும் ஊடகத்தினருக்கும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

கி. வீரலட்சுமி MA நிறுவனத் தலைவர் தமிழர் முன்னேற்றப்படை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *