
பழனியில் தெரு நாய்களை கட்டுப்படுத்த கோரி, பழனி நகராட்சியில் தேமுதிக சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தெரு நாய்கள் பிரச்சனை அதிகரித்து வருவதை தொடர்ந்து,
திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளர் எம் சிவக்குமார் அவர்களின் ஆலோசனயின்படி பழனி கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் எஸ் பி செல்வராஜ் , ஒன்றிய கழக அவைத் தலைவர் மணிகண்டன், பொருளாளர் துரைராஜ் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் ரமேஷ், கருப்புசாமி, பேரூர் நிர்வாகிகள் யாசர் அராபத் மற்றும் வாகாப்பு , ராமர், நகர செயலாளர் இ.எஸ். ஐயப்பன், அவைத் தலைவர் துரை ரவி, பொருளாளர் ஜோதி, மற்றும் கோபி,ரித்திஸ், சேம்பர் செல்வம், எலக்ட்ரிக் ரவி, ஆகியோர் கலந்து கொண்டு நகர்மன்ற தலைவர் உமா மகேஸ்வரியிடம் மனு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து நகர்மன்ற தலைவர் உமா மகேஸ்வரி தெருநாய்கள் கட்டுப்படுத்துவது பற்றி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தேமுதிக பொறுப்பாளர்களிடம் உறுதியளித்தார்.






