March 2, 2026
போக்சோ (POCSO) வழக்குகளை கட்டப்பஞ்சாயத்து செய்வதாக அனைத்திந்திய நீதிக்கான வழக்கறிஞர் சங்கத்தின் சார்பாக கோரிக்கை மனு.

போக்சோ (POCSO) வழக்குகளை கட்டப்பஞ்சாயத்து செய்வதாக அனைத்திந்திய நீதிக்கான வழக்கறிஞர் சங்கத்தின் சார்பாக கோரிக்கை மனு.

திண்டுக்கல்லில் அனைத்திந்திய நீதிக்கான வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக கடந்த வாரம் சிறுமலை பகுதியில் ஒன்பதாவது வளைவில் காட்டுப்பகுதிக்குள் வனத்துறை மற்றும் தனிப்படையினரால் ஏசிஎப் ரவிக்குமார் ரேஞ்சர் கிருஷ்ணகுமார் மற்றும் கார்டு மணிகண்டன் ஆகியோர் ரோந்து பணியின் போது பிடிக்கப்பட்ட பையனும் மைனர் சிறுமியிடம் விசாரணை நடந்து வந்தது.

இதில் முறைப்படி விசாரணை நடத்தவில்லை என்றும் போஸ்கோ வழக்கு பதியவில்லை என்றும் மேலும் இதே போல் ஆசிரியர் ஒருவர் தனியார் பள்ளியில் பயிலும் சிறுவன் ஒருவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டு காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

இப்ப புகார் மனு மீதும் எவ்வித வழக்கும் இதுவரை பதியப்படவில்லை இந்நிகழ்வை குறித்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் இடம் வழக்கறிஞர்கள் விசாரித்ததில் எவ்வித புகார் வரவில்லை என்று கூறியுள்ளனர் இதனால் அனைத்திந்திய நீதிக்கான வழக்கறிஞர்கள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளருக்கு போஸ்கோ வழக்கு பதிவு செய்வதற்கு பதிலாக கட்டப்பஞ்சாயத்து செய்து விடுவதாக குற்றச்சாட்டு கூறி மனு அளித்தனர் மேற்படி சம்பவம் குறித்து உரிய விசாரணை குழு அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *