
மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர்நேரில் சென்று பாராட்டு
திருநெல்வேலி மாவட்டம் பேட்டை காமராஜர் நகர்மன்ற மேல்நிலைப் பள்ளியின் முதுகலை பொருளாதார ஆசிரியராக இருப்பவர் பொன்னுசாமி.
இவர் தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு 2025 ஆம் ஆண்டு சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்
இதனை அறிந்த திருநெல்வேலி மாநகராட்சி மேயர் திரு ராமகிருஷ்ணன், துணை மேயர் ராஜு , மண்டல சேர்மன் மகேஸ்வரி, கவுன்சிலர்கள் 18 ஆவது வார்டு சுப்பிரமணியன் 20 வது வார்டு மன்சூர் ஆகியோர் பள்ளிக்கு நேரடியாக சென்று ஆசிரியரை பொன்னாடை அணிவித்து வாழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியில் தலைமையாசிரியை திருமதி இவாஞ்சலின் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்






