
பாலம் அமைக்க வேண்டி ஊர் பொதுமக்கள் கோரிக்கை !
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பொய்யாங்குளம் கிராமத்தில்
இன்று மாலை பெய்த கன மழையால் 25 ஏக்கர் வரையிலான பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.
சாலையில் அமைந்துள்ள சிறிய பாலத்தினால் தண்ணீர் சரிவர செல்ல முடியாததால் மழைநீர் சாலைகளில் வெள்ளம் போல் செல்கிறது.
வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாயினர்.
சிறிய பாலத்தினை பெரிய பாலமாக மாற்றவும், சேதமடைந்த சாலையை சரிசெய்யவும் ஊர் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.






