
திருவள்ளூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் இயங்காமல் இருக்கும் மாணவ மாணவிகள் விடுதியை மீண்டும் திறக்க மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலரிடம் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு கோரிக்கை
திருவள்ளூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலராக மதிப்புமிகு ப.செந்தில்குமார் அவர்களை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் சார்பில் நிறுவனத் தலைவர் சா.அருணன் தலைமையில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர் மற்றும் புதியதாக பொறுப்பேற்றுள்ள அலுவலக கண்காணிப்பாளர் மதிப்புமிகு மோகன் , இளநிலை பொறியாளர் குமார் ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்தனர் பின்பு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் மதிப்புமிகு ப.செந்தில்குமார் அவர்களிடம் கோரிக்கை மனு அளித்தனர் அதன் விவரம் மனுவில் மாவட்டத்தில் இயங்கிக் கொண்டு இருந்து தற்காலிகமாக மூடப்பட்டுள்ள விடுதிகளை மீண்டும் திறக்க வேண்டும்
பெரியப்பாளையம் சமூகநீதி அரசினர் மாணவர் விடுதி, சமூகநீதி அரசினர் மாணவர் விடுதி…திருவள்ளூர் , கோளப்பன்சேரி சமூகநீதி அரசினர் மாணவர் விடுதி ,வெள்ளியூர் சமூகநீதி அரசினர் மாணவர் விடுதி செவ்வாப்பேட்டை சமூகநீதி அரசினர் மாணவர் விடுதி, ஆரணி சமூகநீதி அரசினர் மாணவர் விடுதி.(பழங்குடியினர் நலத்துறை), திருவள்ளூர் சமூகநீதி அரசினர் மாணவியர் விடுதி, பூந்தமல்லி அரசினர் மாணவியர் விடுதி மற்றும் திருத்தணி சமூகநீதி மகளிர் விடுதி, ஆகிய விடுதிகள் கட்டடங்கள் பழுதடைந்த நிலையிலும் மாணவர் சேர்க்கை காரமாகவும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது இந்த விடுதிகளுக்கு விரைவாக கட்டடம் கட்ட ஏற்பாடு செய்ய வேண்டும்.
மாணவர்கள் சேர்க்கை குறைவாக உள்ள விடுதிகளை இரவு பாடச்சாலைகளாக மாற்றி அப்பகுதியில் உள்ள பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் மாணவர் உயர்விற்கு வழிக்காட்டி வேலைவாய்ப்பிற்கான தேர்விற்கு தயாராகும் வகையில் பயிற்சி மையமாக மாற்றியமைத்து மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்க ஏற்பாடு செய்து ஏற்கனவே பணியாற்றும் காப்பாளர் மற்றும் பணியாளர்களை பயன்படுத்திக் கொண்டு செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் ,பாழடைந்த கட்டடம் இடிக்கப்பட்டு தற்காலிகமாக நிறுத்தப்பட்ட விடுதிகளின் கட்டடங்களை விரைந்து கட்டிமுடிக்கப்பட்டு மீண்டும் விடுதிகளை திறக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் அதுவலையில் வாடகை கட்டடத்தில் இயங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
விடுதி மற்றும் பள்ளிகளில் குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களை வீட்டின் அருகாமையில் உள்ள விடுதி மற்றும் பள்ளிகளுக்கு பணியிட மாற்றம் செய்யவேண்டும் , விடுதிகளில் பணியாற்றும் பணியாளர்கள் உடபரியாக என கண்டறியப்பட்டவர்களை மாணவர்கள் நலன் கருதி பள்ளிகளில் மாற்று பணி வழங்கிட வேண்டும், கிராமங்களில் கல்லூரி விடுதிகளாக மாற்றம் செய்யப்பட்ட விடுதிகளை மீண்டும் பள்ளி மாணவர்கள் தங்கும் விடுதிகளாக மாற்றம் செய்ய வேண்டும் மேற்கண்ட கோரிக்கைகளை பரிசீலனை செய்து நிறைவேற்றிட ஐயா அவர்களை பணிவுடன் கேண்டுக்கொள்கிறேன் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் மாநிலத் துணை தலைவர் ஜான்சன், கூட்டமைப்பின் ஆலோசகர்கள் சேவ்வாய்ப்பேட்டை ஆ.தி.ந ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் வெங்கடேசன், வடகரை ஆ.தி.ந பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் வெங்கட்ரவி, வடகரை ஆ.தி.ந. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கிருஷ்ணன் குட்டி , துணை பொது செயலாளர்கள் ஷாலின், பொன்னுரங்கம், மாநில அமைப்பு செயலாளர் பாலு, ஆசிரியர் காப்பாளர் பிரிவு மாவட்ட செயலாளர் மோகன், பணியாளர்கள் பிரிவு மாவட்டசெயலாளர் சந்திரன் , மாவட்ட நிர்வாகிகள் கோகுல்ராஜ், ஞானவொளி , ராம்மூர்த்தி , அமலா, ஏழுமலை, எம்ரோஸ், கருணாகரன், மோகன்,உதயகுமார், மோகன்குமார், பாஸ்கர்,தசரதன், ,பிலோமினால், மம்மீளா, எழிலரசி, அன்பழகன், ஷீபாராணி உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்






