March 2, 2026
நீங்க ஒரு விஷயம் நல்லா கவனிச்சு பார்த்தீங்கன்னா, இந்தியாவில் IAS படித்து உயர் மற்றும் முக்கிய பதவிகளில் இருப்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் எல்லாம் உத்திரப்பிரதேசத்தை சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள்.

நீங்க ஒரு விஷயம் நல்லா கவனிச்சு பார்த்தீங்கன்னா, இந்தியாவில் IAS படித்து உயர் மற்றும் முக்கிய பதவிகளில் இருப்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் எல்லாம் உத்திரப்பிரதேசத்தை சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள்.

குறிப்பாக, தற்போதைய தலைமை தேர்தல் அதிகாரியான ஞானேஷ் குமார் IAS, இவரது மூத்த மகள் மேத்தா ரூபம் IAS, இவருடைய கணவர் IAS, இளைய மகள் அபிஷிரீ IRS, இவருடைய கணவர் IAS என எல்லாரும் உ.பியை சேர்ந்தவர்கள் தான்.

இந்த தகவல் தெரிந்ததும் ‘இந்திய அளவில் எந்த மாநிலத்திலிருந்து அதிகளவில் IAS, IPS அதிகாரிகள் வருகிறார்கள்’? என்ற கேள்வி எழ, ரிசர்ச் செய்து பார்த்தால், ஷாக்.

ஜனவரி, 2024-ம் ஆண்டின் புள்ளி விபரத்தின்படி, இந்தியாவிலேயே உத்திரப்பிரதேசத்தில் தான் அதிகளவில் IAS மற்றும் IPS படித்து வந்துள்ளார்கள்.

இதோ புள்ளி விபரம்:

உத்திரப்பிரதேசம் – 652 IAS / 541 IPS
மத்தியப் பிரதேசம் – 459 IAS / 319 IPS
மகாராஷ்டிரா – 435 IAS / 317 IPS
தமிழ் நாடு – 394 IAS / 276 IPS

இந்த பட்டியலில் 6-வது இடத்தில்…

பீகார் – 359 IAS / 242 IPS

9-வது இடத்தில்…
குஜராத் – 313 IAS / 208 IPS

நாம் பல ஆண்டுகளாக படித்து வந்து விஷயம் என்னான்னா, ‘கல்வியறிவில் முதல் இடத்தில் உள்ள மாநிலம் எதுவென்றால், அது கேரளா’ தான்.

ஆனால், இந்த பட்டியலில் கேரளா 11-வது இடத்தில்…266 IAS / 188 IPS.

அதாவது, நாட்டிலேயே கல்வியறிவில் முதல் இடத்தில் உள்ள மாநிலத்தில் இத்தனை IAS/IPS அதிகாரிகள் தான் வருகிறார்கள்.

இன்னொரு புள்ளி விபரம் பாருங்க…

இதே 2024-ம் ஆண்டு புள்ளி விபரத்தின்படி, கல்வியறிவில் முதல் 10 இடங்களில் உள்ள மாநிலங்களின் பட்டியலில் உத்திரப்பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், பீகார் மாநிலங்களே இல்லை.

கல்வியறிவில்..

உத்திரப்பிரதேம் 23-வது இடம்
பீகார் 25-வது இடம்
மத்தியப் பிரதேசம் 26-வது இடம்.

இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களில் உ.பி 23-வது இடத்திலும், ம.பி 26-வது இடத்திலும் இருக்கிறது. ஆனால், இந்த இரண்டு மாநிலங்களிலிருந்து தான் அதிகளவில் IAS/IPS அதிகாரிகள் வந்திருக்கிறார்கள்.

(மக்கள் தொகை அதிகமாக இருந்தாலும், கல்வியறிவு இவ்வளவு பாதாளத்தில் இருக்காதே..?)

அதுவும், கேரளா, கர்நாடகா மாநிலங்களை விட பீகார் மாநிலம் 6-வது இடத்தில் இருக்கிறது என்றால் இதை நம்ப முடிகிறதா…?

சில நாட்களுக்கு முன் ஒரு வீடியோ வெளியானது. பீகாரில் உள்ள ஒரு பள்ளியில் மாவட்ட ஆட்சியர் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

ஒரு ஆங்கில ஆசிரியரை சில ஆங்கில வார்த்தைகளை கரும்பலகையில் எழுத சொன்னார்.

கலெக்டர் எழுத சொன்ன வார்த்தைகள் Twenty, Eleven, Fifteen.

அந்த ஆங்கில ஆசிரியர் எழுதியது…

Tvantee, Ilavan, Pipteen…

இதை பார்த்து கலெக்டர் அதிர்ச்சியடைந்து அங்கிருந்து சென்று விட்டார்.

கல்வியறிவில் இப்படி ஒரு சூழல் அங்கே நிலவும்போது, இங்கேயிருந்து எப்படி இத்தனை IAS/IPS அதிகாரிகள் உருவாக முடிகிறது…?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *