March 2, 2026
ஞாபகம்..

ஞாபகம்..

மறந்தோம் மறந்தோம் மறப்பதை மறந்தோம்
மறக்கும் போழ்தில் நினைப்பதை மறந்தோம்
ஓயும் போழ்தில் உறங்கிட மறந்தோம்
உண்ணும் பசியில் சுவைகளை மறந்தோம்
எழுகின்ற நிலையில் இருப்பதை மறந்தோம்
எதிர்க்கும் போதில் துணிவை மறந்தோம்
கற்கும் பள்ளியில் கவனம் மறந்தோம்
காவல் நிற்க கூலியை மறந்தோம்
ஏறும் மலையில் வழுக்கலை
ஏல்லோரோடும் இருப்புகள் மறந்தோம்
தாவும் காலத்தில் திறமையை மறந்தோம்
தக்கன செய்ய பொழுதை மறந்தோம்…
காயும் வெய்யிலில் களத்தை மறந்தோம்
கவிழும் படகில் நடுநிலை மறந்தோம்
அடிக்கும் குளிரில் போர்வை மறந்தோம்
அசையா நேரத்தில் அமைதியை மறந்தோம்
உண்ணென உள்ளதை சாப்பிட மறந்தோம்
உலகோர் சேர நட்பை மறந்தோம்
மறப்பன வெல்லாம் மறக்க மறந்தோம்
மதிப்பன தேடி உழைக்க மறந்தோம்
இருப்பன பூசி இருக்க மறந்தோம்
எல்லைகள் உள்ளே சிரிக்க மறந்தோம்
மறதியை பூசி மறக்க மறந்தோம்
மதி நுட்பத்துடனே இருக்க மறந்தோம்…

பாவலர் மு இராமச்சந்தியன்
தலைவர் தமிழர் தன்னுரிமைக் கட்சி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *