
அதிமுக குமரி கிழக்கு மாவட்டம் புகார் மனு அளித்தனர்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக (அதிமுக) குமரி கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி சார்பில், இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஸ்டாலின் அவர்களிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
இந்த மனு, குமரி கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் திரு. குமரகுரு அவர்கள் தலைமையில், குமரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் திரு. ஜெயசுதர்சன் அவர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது.
மனுவில், “சமீபகாலமாக சமூக வலைதளங்களில் அதிமுக கட்சி கோட்பாடுகள் மற்றும் விதிமுறைகளை மீறி செயல்படும் வகையில், மேலும் கழக நிர்வாகிகளுக்கிடையில் மோதலை ஏற்படுத்தும் விதமாக அவதூறாக பதிவிட்டு வரும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு செயல்படும் நபர்கள் காரணமாக மோதல் சூழல் உருவாகக் கூடும் என்பதால், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இதனை கருத்தில் கொண்டு, அவதூறு பரப்பும் நபர்களுக்கு எதிராக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் மாவட்ட கழக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.






