
இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாராட்டு !
பழனி ஆகஸ்ட் 18 :
கடந்த ஆகஸ்ட் 2 மற்றும் மூன்றாம் தேதிகளில் சேலம் மாவட்டத்தில் மாநில அளவிலான 23 வயதுக்கு உட்பட்ட வீராங்கனைகளுக்கான மல்யுத்த போட்டியில் பழனியைச் சேர்ந்த மல்யுத்த வீராங்கனைகள் வெற்றி பெற்று 5 தங்கப் பதக்கங்களை பெற்றனர்.
மேலும், தேசிய அளவிலான போட்டிக்கு அவர்கள் தேர்வாகி இருக்கின்றனர் வருகின்ற 22, 23, 24 ஆகிய தேதிகளில் ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெற உள்ள மல்யுத்த போட்டிகளில் பங்கு பெற அவர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
இந்த செய்தி பழனி வட்டாரமாக மக்களிடையே பெரும் மகிழ்ச்சி ஏற்படுத்தியது.
தேசிய அளவில் நடைபெறும் மல்யுத்த போட்டியில் கலந்து கொள்ள செல்லும் வீராங்கனைகளை உற்சாகப்படுத்தும் விதமாக மக்கள் உரிமைகள் கழகம் சார்பில் பாராட்டி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
மாநில அமைப்பு செயலாளர் திருமதி பரிதா ஷேக் முகமது அவர்கள் தலைமையில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவர் திரு கார்த்திக் செயலாளர் திரு வின்னர் மணிகண்டன் மற்றும் மாநில மாவட்ட நகர நிர்வாகிகள் பாராட்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இளம் வீராங்கனைகள் தேசிய அளவிலும் வெற்றி பெற்று தங்கப்பதக்கங்கள் பெற தலைமைக் கழகத்தின் சார்பில் வாழ்த்துக்கள்…






