
ஸ்ரீபெரும்புதூர் -இருங்காட்டு கோட்டையில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் !
ஸ்ரீபெரும்புதூர் ஆகஸ்ட் 6
ஸ்ரீபெரும்புதூர் அருகே இருங்காட்டுக்கோட்டை ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள இருங்காட்டுக்கோட்டை ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெற்றது.
குறு-சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை,ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, மீன்வளத்துறை, உள்ளிட்ட. 16 துறைகள் 45 சேவைகள் அடங்கிய முகாமினை ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் எஸ்டி கருணாநிதி துவக்கி வைத்தார்.

இதில் வட்டார ஊராட்சி அலுவலர் பவானி, வட்டார கிராம ஊராட்சி அலுவலர் முத்து கணபதி, மற்றும் இருங்காட்டுக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமார் உள்ளிட்ட வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.