March 2, 2026
திருவண்ணாமலை வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் புகார் மனு

திருவண்ணாமலை வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் புகார் மனு

திருவண்ணாமலை,ஆக.1 –

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக இருப்பவர் தியாகராஜன். இவர் 100 நாள் வேலையிலும், மற்றும் தமிழக முதல்வர் உத்தரவுப்படி கலைஞர் வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளுக்கு 20,000 லஞ்சமும், அதேபோன்று தொடர்ந்து பல்வேறு ஊராட்சிப் பணிகளில் ஈடுபடும் தலையிட்டு பல்வேறு முறைகேடுகள் செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த முறைகேடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் தலைவர், மாவட்ட திட்ட அலுவலரிடமும் வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய பகுதியிலுள்ள பொதுமக்கள் சார்பாக புகார் மனு கொடுத்துள்ளனர்.

இந்த மனு கொடுத்தது குறித்து விவரம் அறிந்த தியாகராஜன் மனு கொடுத்தவர்களை கூப்பிட்டு பல்வேறு வகையில் கொலை மிரட்டல் விடுத்ததாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து இதுகுறித்து பலமுறை முதலமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் எந்த விதமான நடவடிக்கை எடுக்காத காரணத்தால் வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஏராளமான மக்களை திரட்டி வேம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு வட்டார வளர்ச்சி அலுவலர் தியாகராஜனை மாற்ற கோரி போராட்டம் நடத்த இருப்பதாக மனுக்கள் முதலமைச்சருக்கும், துணை முதலமைச்சருக்கும், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சருக்கும், மாவட்ட ஆட்சித் தலைவருக்கும் அனுப்ப இருப்பதாக தகவல் பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிந்து இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எனவே முறைகேடு பணிகளைச் செய்யும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தியாகராஜன் மீது நடவடிக்கை எடுப்பார்களா என்ற கேள்வியை பொதுமக்கள் எழுப்பி உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *