
மதுரையில் ஆகஸ்ட் 25-ந் தேதி தவெக பிரம்மாண்ட மாநாடு தொண்டர்கள் உற்சாகம் தென்மாவட்டம் முழுவதும் போஸ்டர் பேனர் 30 லட்சம் பேர் திரள்கிறார்கள்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மதுரையில் இரண்டாவது மாநில மாநாட்டுக்கான தேதி அறிவித்ததும் மதுரை மாநகர் வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் விஜய் அன்பன் கல்லானை சார்பாக தொண்டர்கள் உற்சாகமாக மாநாட்டு வேலைகளை செய்து வருகின்றனர்.
விஜயகாந்த் பிறந்தநாளில் மாநாடு மறைந்த தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் பிறந்த நாளான ஆகஸ்ட்25 ம் தேதி அன்று த.வெ.க இரண்டாவது மாநில மாநாட்டை நடத்துகிறார் விஜய். விஜயகாந்த் தே.மு.தி.க வை தொடங்கிய போது முதல் மாநாட்டை மதுரையில் நடத்தி இருந்தார். இந்த மாநாட்டில் தே.மு.தி.க என்ற தனது கட்சி பெயரை விஜயகாந்த் அறிவித்திருந்தார் மதுரையில் நடந்த மாநாடு பெறும் திருப்புமுனையை ஏற்படுத்தியது.
அந்தவகையில், மதுரை மாநாட்டு தேதியை த. வெ.க. தலைவர் விஜய் அறிவித்துள்ளது அக்கட்சி தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.2026 – நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, 20 லட்சம் ஆதரவாளர்களை ஒருங்கிணைக்க கட்சியை வலுப்படுத்தும் முக்கிய மாநாடு என இது கருதப்படுகிறது வருகிற சட்டமன்றத் தேர்தலில் மதுரை தொகுதியில் விஜய் போட்டியிட வேண்டுமென ஆதரவு தெரிவித்து அக்கட்சியினர் அப்பகுதியில் பெருமளவு சுவரொட்டிகள் ஒட்டியது குறிப்பிடத்தக்கது இதனிடையே த.வெ.க மதுரை மாநகர் வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் A முகமது சித்திக் B.A. சார்பாக நெடுஞ்செழிய பாண்டியரே… வருக. வருக. என தலைப்பு வைக்கப்பட்ட பேனர் வைரலானது.
தமிழக வெற்றிக் கழக முதல் மாநில மாநாட்டில் நடிகர் விஜய்யின் பேச்சில் இடம்பெற்ற “குட்டி ஸ்டோரி” முதல் மாநில மாநாடு 27/28 அக்டோபர் 2024–இல் விக்கிரவாண்டியில் பிரமாண்டமாக நடைபெற்றது . தலைவராக நடிகர் விஜய் பங்கேற்று, அரசியல், கொள்கைகள், எதிரிகளிடம் எதிர்நோக்கும் சவால்களை பற்றி உரையாற்றினார். மேடையில் “குட்டி ஸ்டோரி” விஜய் அவர்கள் கூறினார் சிறு வயதிலான போர்வீரன்
ஒரு நாட்டில் பெரிய போர் எழுந்தது. சக்திவாய்ந்த தலைவர் இல்லாததால், தலைமை சூழ் பொருந்த விஷயத்தில் சிறுவன் ஒருவரிடம் பொறுப்பு கொடுக்கப்பட்டது. பெரியோர் சந்தேகம் தெரிவித்தாலும், அந்தப் பையன் தனது படையை முன்னால் வைத்து போருக்கு செல்கிறான் .
“நீ சின்ன பையன்; இங்கிருக்கிறன பெரும் போர்வீர்கள். நீ எப்படிச் இது செய்வ?” என்று கேள்விகள் எழுந்த போது, அந்த பையன் எந்த பதிலும் சொல்லாமல் முன்னேறிச் சென்றான்
அந்தச் சிறுவன் யார்? – பாண்டியனே நெடுஞ்செழியன்
குதூகலமான சர்ச்சைக்கு பிறகு சமூக வலைத்தளங்களில் “யார் அந்த சிறுவன்?” என கேள்வி எழுந்தது . சங்க இலக்கிய நூல்கள் (“மதுரைக் காஞ்சி”, “புறநானூறு”) சொல்லும் வரலாற்றின் வீரன் இளம் வயதாகிலும் தன் தந்தையின் மரணத்துக்குப்பின் அரசபொருப்பு ஏற்றுக் கொள்ள, சோழ–சேர–கொங்கு கூட்டணியைக் எதிர்த்து தலையாலங்கானத்தில் வெற்றி பெற்ற பாண்டிய நெடுஞ்செழியன் ..
சிறுவனாக ஆட்சிப் பொறுப்பு ஏற்று வெற்றி பெறும் கதையை ஊடாக, அவர் சிலரிடம் இருந்து விலைமதிப்பற்ற அரசியலுக்கான எதிர்மறை கருத்துக்களைத் தாண்டி முன்னேற்றத்தை நோக்கிச் செல்ல வேண்டும் என்பதைக் விஜய் அழகாக கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து மதுரையில் நெடுஞ்செழிய பாண்டியரே… வருக வருக என த. வெ. க தொண்டரால் வைக்கப்பட்ட பேனர் வைரலானது.






