March 4, 2026
பாட்டிலுக்கு 10 ரூபாய் வீதம் நாள் ஒன்றுக்கு 150 கோடி வருடத்திற்கு 5,400 கோடி கொள்ளை அடிப்பவர்கள் திமுகவினர்

பாட்டிலுக்கு 10 ரூபாய் வீதம் நாள் ஒன்றுக்கு 150 கோடி வருடத்திற்கு 5,400 கோடி கொள்ளை அடிப்பவர்கள் திமுகவினர்

100 நாள் சம்பளத்தை ஒரு நாள் பாக்கி இல்லாமல் அம்மா வழியில் வழங்கியவர் புரட்சித்தமிழர் எடப்பாடி : ஆர்பி உதயகுமார் பேச்சு :

சோழவந்தான்:

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் , வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் கட்டக்குளம் கிராமத்தில் , அன்னதானம் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் மு. காளிதாஸ் தலைமை தாங்கினார் .

முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் கலந்துகொண்டு அன்னதானம் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி பேசும்போது, திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் கூறும் போது 100 நாள் வேலை 150 நாட்கள் வழங்கப்படும் என்று கூறினார்கள். ஆனால், இன்று 100 நாள் வேலை 50 நாட்களாக மாறி 25 நாட்களாக மாறி தற்போது 5 நாட்களாக மாறிவிட்டது அந்த ஐந்து நாட்களுக்கும் முறையான சம்பளம் வழங்குவதும் இல்லை. ஆனால் , அம்மா ஜெயலலிதா இருந்தபோது 100 நாள் வேலை சம்பளத்தை ஒரு நாள் கூட பாக்கி இல்லாமல் தமிழக மக்களுக்கு வழங்கினார்கள்.

அம்மா வழியில் வந்த எடப்பாடி பழனிச்சாமி, 100 நாள் சம்பளத்தை ஒரு நாள் பாக்கி இல்லாமல் வழங்கினார். ஆனால், இன்றைய முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சியில் 100 நாள் வேலை ஆனது 5 நாட்களாக மாறி அந்த5 நாட்களும் சம்பளம் வழங்குவதில்லை என, பொதுமக்கள் கூறுகிறார்கள்.

இப்போது, பாட்டிலுக்கு பத்து ரூபா கமிஷன் அடிக்கிறார்கள் . நீங்கள் எந்த பாட்டில் என்று கேட்பீர்கள் அது அந்த பாட்டில் ஒரு நாளுக்கு 150 கோடி நாளுக்கு 150 கோடி என்றால், ஆண்டுக்கு 5400 கோடி ரூபாய் இந்த பணம் செந்தில் பாலாஜி மூலமாக மேலிடத்திற்கு அனுப்புவதால் செந்தில் பாலாஜி, ஸ்டாலினுக்கு தியாகியாக தெரிகிறார் என்பதுதான் இன்றைய நிலைமை . அரசு பணம் 5400 கோடியை வீட்டிற்கு எடுத்துச் செல்லும் நீங்கள் இந்த 100 நாள் சம்பளம் பாக்கியை கொடுக்கலாமே ஏன்னு கேட்டா அது மோடி அரசு தான் தரணும் மத்திய அரசு தான் தரணும் . மது பாட்டில் ஊழல்ல வரும் பணத்தை வீட்டுக்கு கொண்டு போறீங்க 100 நாள் வேலை பார்க்கிறவங்களுக்கு சம்பளம் இல்லை என கை விரிக்கிறீங்க
இது என்ன நியாயம். இதைத் தெரிந்து தான் எடப்பாடி பழனிச்சாமி அமித் ஷாவை சந்தித்து 100 நாள் வேலை பணத்தை உடனடியாக விடுவிக்க ஏற்பாடு செய்தார். அதன் பயனாகத்தான், 2900 கோடி 100 நாள் வேலை சம்பள பணம் உடனே தமிழகத்திற்கு விடுவிக்கப்பட்து
என்று பேசினார்.

முன்னதாக, இளைஞர் பாசறை மாவட்ட இணைச் செயலாளர் மு கா. மணிமாறன் வரவேற்புரை ஆற்றினார் . நிகழ்ச்சியில் , முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கருப்பையா, மாணிக்கம், தமிழரசன், வாடிப்பட்டி முன்னாள் சேர்மன் ராஜேஷ் கண்ணா, மகளிர் அணி லட்சுமி ,
விவசாய அணி வாவிவிடமருதூர் குமார், முடுவார்பட்டி ஜெயச்சந்திர மணியன், புதுப்பட்டி
பாண்டுரங்கன், கோட்டைமேடு பாலா, தென்கரை நாகமணி, கச்சைகட்டி
ஆலயமணி , தகவல் தொழில்நுட்ப அணி மதுசூதனன், குரு பார்த்திபன், வழக்கறிஞர் காசிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *